பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 விந்தன் இலக்கியத் தடம் ஏனெனில், பழைய பாசி பிடித்த வழுக்குப் பாதையை விட்டு விலகிப் புதிய பாதையிலே நான் நடக்க ஆரம்பித்ததும், என்னைத் தொடாந்து வருவதை நீங்கள் நிறுத்திக் கொண்டு விடவில்லை; அஞ்சி நடுங்கி ஓடி விடவும் இல்லை! பார்க்கப் போனால் உங்களைப் பற்றிக் குறை கூறித் திரியும் மகானுபாவர்கள் இதுவரை உங்களுக்காக என்னத்தைச் செய்து குவித்துவிட்டார்கள்?” (விந்தன் கதைகள் பக். 5,6,7) அவர் தம்மைப் பொறுத்தவரையில் என்றைக்கும் ஏழை எளியவர்கள், உழைப்பாளி வார்க்கத்தைச் சார்ந்தவர்கள் ஆகியோருள் ஒருவர் என்பதையும் அவர்கள் மீது தமக்கு அன்பும் பற்றும், பாசமும் நம்பிக்கையும் உண்டு என்பதையும் தம்முடைய படைப்பு ஒவ்வொன்றிலும் முத்திரையிட்டுக் காட்டியுள்ளார். தடம் பதித்த எழுத்தாளர்கள் வரிசையில் விந்தன் சேர்க்கப்படும்போது சிறப்பாக அவர் பதித்துள்ள தடம் இதுதான் என்பதை நாம் கூறியாக வேண்டும். கல்கி இதழில் முல்லைக் கொடியாள் என்ற முதல் சிறுகதை தொடங்கி இறுதிக் காலம்வரை அவர் எழுதிய கதைகள் யாவும் இதற்குச் சான்றுகள். "ஐயா பொய்யும் புரட்டும் இல்லாத லோசர்க்கிளே எனக்குப் போதும். அவர்கள் வாழ்ந்தால் நானும் வாழ்கிறேன். அவர்கள் செத்தால் நானும் சாகிறேன்” என்று தம்முடைய எழுத்துப் பணிக்கான உந்துதலும் உற்ற களமும் எவை என வெளிப்படையாக எடுத்துச் சொன்னவர் அவர். அவர் தம்முடைய இலட்சிய எழுத்தாளராக மார்க்சிம் கார்க்கியை ஏற்றுக் கொண்டதில் வியப்பில்லை. (ஒ. மனிதா...) மார்க்சிம் கார்க்கி, “நான் எழுதத் தொடங்குவதற்கு முதற் காரணம் என்னை அழுத்திக் கொண்டிருக்கின்ற சாரமற்ற வாழ்க்கை என்னை நிர்பந்தித்தது; இரண்டாவது காரணம், என்னுள் காட்சிக் கருத்து வடிவங்கள் நிறைந்திருப்பதால் என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை, என்று கூறுகின்றார். விந்தனுக்கு இதே நிர்பந்தமும், காட்சிக் கருத்து வடிவங்களின் பெருக்கமும் இருக்கவே செய்தன.