பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 3 மிராசுதார்களையும், தாசில்தார்களையும், ஐ.ஏ.எஸ். காரர்களையும், வக்கீல்மார்களையும் கைவிட்டு விட்டு, ஏழைக் குடியானவனையும் ஆலைத் தொழிலாளியையும் ரிக் ஷா வண்டிக்காரனையும் சுமை கூலிக்காரனையும் பற்றிக் கதை எழுதத் தொடங்கினார்கள். ஆனால் எவ்வளவுதான் அனுதாபத்துடனும் இலக்கியப் பண்புடனும் எழுதினாலும் அந்தக் கதைகள் கதை என்ற முறையில் நன்றாயிருக்கு மே தவிர, அவற்றில் உண்மை ஒளி தோன்றுவதில்லை. பாடுபட்டு அறியாதவன் பாட்டாளி துயரத்தைப் பற்றியும், சேற்றில் இறங்கி அறியாதவன் குடியானவனுடைய கஷ்டத்தைப் பற்றியும் என்னதான் கண்ணிரில் பேனாவைத் தோய்த்துக்கொண்டு எழுதினாலும் அந்தக் கதைகளில் மற்ற எல்லாச் சிறு கதை இலட்சணங்களும் இருக்கலாம்; உள்ளத்தை ஊடுரு வித் தைக்கும்படியான இதயம் ஒன்றிய ஈடுபாடு இருப்பதில்லை. அப்படிப்பட்ட உண்மை ஒளி வீசும் சிறு கதைகளை எழுதுவதற்கு ஏழை எளியவர்களிடையே யிருந்தும் உழைப்பாளி மக்களிடையேயிருந்தும் ஆசிரியர்கள் தோன்ற வேண்டும்; அவர்களுடைய எழுத்தில் இலக்கியப் பண்பும் பொருந்தியிருக்க வேண்டும். மேற்கூறிய இலட்சணங்கள் பொருந்திய கதை ஆசிரியர்களில் ஒருவர் பூநீ.வி. கோவிந்தன். உழைப்பாளி மக்களிடையே பிறந்து வளர்ந்து உழைத்துப் பண்பட்டவர். ஏழை எளியவர்கள், தொழிலாளிகள், பாட்டாளிகளின் சுக துக்கங்களை இதயம் ஒன்றி அனுபவித்து உணரும் ஆற்றல் பெற்றவர். அந்த உணர்ச்சிகளை உயிருள்ள தமிழ் நடையில் சித்திரித்து இலக்கியப் பண்பு வாய்ந்த சிறு கதைகள் பலவற்றை அவர் திறம்பட எழுதியிருக்கிறார். ஏழை எளியவர்களின் வாழ்க்கையில் உள்ள சுக சந்தோஷங்களைப் பற்றியும் அவர் எழுதுகிறார். அவர்களுடைய துன்ப துயரங்களைப் பற்றியும் எழுதுகிறார். ஆனால் படிப்பவர்களின் உள்ளத்தில் துன்பமும் வேதனையும்தான் அதிகமாக நிலை பெற்று உறுத்திக் கொண்டிருக்கும்.