பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 விந்தன் இலக்கியத் தடம் இரண்டு சிறுகதைகள் இங்கே எடுத்துக்காட்டுக்குக் குறிப்பிட விரும்புகின்றேன். ஒன்று ஒரே உரிமை. இரண்டாவது கதை புது அடிமை முன்னையது நாற்பதுகளிலும் பின்னயது ஐம்பதிலும் எழுதப்பட்டவை. 'நான் போட்டுத் தம்மை ஒரே உரிமை என்று கதையில் எழுதியிருக்கிறார் விந்தன். ஒரு தலித்தைக் கிராமத்திலும் நகரத்திலும் சந்திக்கிறார். நகரத்தில் அவர் கண்ணெதிரே அவன் எச்சிலை எடுத்து உண்பதைக் கண்டுவிடுகிறார். அடுத்து, அவனுக்கு உதவும் வகையில் ரொட்டி மிட்டாய் வைத்து விற்கும் கடை அமைத்துத் தருகிறார். எதிர்பார்த்தபடி வியாபாரம் நடக்கவில்லை. காரணம்? அவர் சோலையப்பனைச் சந்திக்கும் போது எழும் உரையாடல்கள் மூலம் அதைத் தெரிந்துகொள்ளலாம். ‘என்ன இத்தனை நாளாக ஒன்றும் விற்கவில்லையா?” ‘எப்படிங்க விற்கும்? 'ஏன், இந்தக் கிராமத்திலே ரொட்டி, மிட்டாய் தின்பவர்கள் யாரும் இல்லையா? "இல்லாம என்னங்க? அதோ அந்த முதலியாரு ரொட்டிக்கடை இருக்குங்களே, அதிலே தினம் தினம் எம்மா வியாபாரம் ஆவுது' ‘பின்னே என்ன? உன்னுடைய கடையிலே மட்டும் ஏன் வியாபாரம் ஆகவில்லை? ‘என்ன இருந்தாலும் நான் பறையன் பறையன் தானுங்களே? என் கடையிலே யாராச்சும் ரொட்டி வாங்கணுமின்னா அவங்களும் பறையர்களாகத்தானே இருக்கனும்?. பறப்பயனுக்கு இங்கே என்னடா ரொட்டிக்கடைன்னு! என்னை அடியா அடிச்சுப் போட்டு இந்தக் கடையையும் காலி பண்ணாம இருந்தாங்களே அதைச் சொல்லுங்க? ‘சரி. அப்படியென்றால் நீ இப்போ என்னதான் செய்கிறாய்? 'இது உங்க கடை, இதிலே போட்டிருக்கிற பணம் உங்க பணம். நீங்களே இந்தக் கடையை எடுத்துக்குங்கோன்னு சொல்றேன்!