பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 விந்தன் இலக்கியத் தடம் அப்பாஸ் மற்றும் விந்தன் கதைகள் வாசகர்களிடையே ஏற்படுத்திய தாக்குதல்கள் பலன் தராமற் போகவில்லை. சமுதாய அறநிலை சார்ந்த சிந்தனைகளுக்கு வழி சொல்லாமற் போகவில்லை. அப்பாவிகள் எனப்படும் போராடத் தெரியாத - போராட விரும்பாத மக்கள் தங்களுக்காகப் போராட அவர்களுக்கு ஆற்றலூட்ட வேண்டும். (Empowment) என்ற சிந்தனையும் செயல்திறனும் இன்று நாட்டில் பெருகி வருகின்றன. இது, அன்றே நடைபெற வேண்டுமென்று விந்தன் விரும்பிய கனவுதானே? இந்தக் கதையைத் தலைக்கதையாகக் கொண்டு 1950இல் வெளிவந்த விந்தனின் இரண்டாம் கதைத் தொகுதியாகிய ஒரே உரிமை நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள டாக்டர் மு.வ. கூறுவார் : 'சமூகத்தை விந்தன் சிற்சில இடங்களில்தான் நேராகத் தாக்குகிறார். பல இடங்களில் அவர் அம்பு தொடுப்பதே இல்லை. இன்றிருக்கும் நிலைமையை எடுத்துக்காட்டி பேசாமல் கதை சொல்கிறார். அவர் படைக்கும் பாத்திரங்களும் பெரும்பாலும் அப்பாவிகளே. அவர்களுக்குச் சமூகத்தின் மேல் வயிற்றெரிச்சல் தோன்றுவதே இல்லை. ஆனால் நமக்கு மட்டும் வயிற்றெரிச்சல் தோன்றுகிறது.” வயிற் றெரிச்சல் மூலமாகத்தான் சீர்திருத்தங்களும் மாறுதல்களும் புரட்சிகளும் தோன்ற வேண்டுமானால் இன்னும் இன்னும் அதிகமாக நமக்கு வயிற்றெரிச்சல் தோன்றியாக வேண்டும். அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணிரும் வயிற்றெரிச்சலும் இரட்டைக்குழல்கள் அல்லவா? இக்கதையோடு விந்தனின் அவன் கேள்வி என்ற மற்றொரு கதையும் சேர்த்துப் படிக்க வேண்டும். அந்தக் கதையில் வரும் கண்ணுச்சாமிக்கு ஏழு வருஷச் சிறைத் தண்டனை கிடைக்கிறது. இதைக் கேட்டதும் அவன் இடி இடி என்று சிரித்துக் கொள்கிறான். 'நல்ல வேடிக்கை ஐயா, இது! எனக்கு வைச்ச வக்கீல் என்னடான்னா, நான் தற்கொலை பண்ணிக்கிறதுக்காகக் குளத்திலே விழலேங்கிறதை நிரூபிக்கிறதுக்காக இத்தனை நேரமும் கரடியாக் கத்தினாரு சர்க்கார் கட்சி வக்கீல் என்னடான்னா, நான் தற்கொலை