பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 105 பண்ணிக்கிறதுக்காகத்தான் குளத்திலே விழுந்தேன் என்பதை நிரூபிக்கிறதுக்காக இத்தனை நேரமும் படாத பாடு பட்டாரு. ஆனா, நான் என்னத்துக்காத் தற்கொலை பண்ணிக்கப் போனேன்? என்கிறதைப் பற்றி மட்டும் யாருமே விசாரிக்கலையே? இல்லை. நான் கேட்கிறேன்! இந்தக் கோர்ட்டுங்க எல்லாமே குற்றத்தை மட்டுந்தான் விசாரிக்குமா? குற்றத்துக்குக் காரணம் என்னன்னு விசாரிக்கவே விசாரிக்காதா? (முதல் தேதி - பக் 87) மற்றைய கதை புது அடிமை முதல் தேதி என்னும் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ள கதை, இந்தக் கதைக்குக் களம் தேட விந்தன் வானுலகிற்குச் செல்கிறார். 'பசி, பிணி, மூப்பு, அற்ற ஆனந்த வானுலகிலே சுயசிரம ஜீவிகள் இருவர் சந்தித்தனர். அவரில் ஒருவன் நீக்ரோ, இன்னொருவர் இந்தியன், என்று கதை ஆரம்பிக்கிறது. நீக்ரோ அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவன். அவனுக்கும் இந்தியனுக்கும் ஒற்றுமை : அடிமை குபேர நாட்டிலும் புண்ணிய பூமியிலும் அடிமை வாழ்வு. அமெரிக்க அடிமை சொல்கிறான்; ‘ஒரு காலத்தில் பணம் படைத்த பாதகர்கள் ஆடு மாடுகள் போல் சந்தையில் விலை கொடுத்து எங்களை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.” ‘எங்களை எல்லாம் விலை கொடுக்காமலேயே வாங்குகிறார்களே என்கிறான் இந்தியன். உரையாடல் தொடர்கிறது. அங்கு அடிமைகளைத் தேடிக் கொண்டு பணம் படைத்தவர்கள் வருவார்கள். இங்கு அவர்களைத் தேடிக் கொண்டு இவர்கள் போவார்கள். அங்கே அடி உதை விழும். இங்கு இன்னும் அதிகமாக "ஐயோ என்னை அடிப்பதால் உங்கள் கை வலிக்குமே ஆண்டே என்ற கதறல்,