பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 விநதன் இலக்கியத் தடம் அதே வகையில் டயர் தேய்ந்துவிட்டால் ரீடிரேடு செய்ய முடிகிறது. ஆனால் மனிதன் ரிடையர்டு ஆகிவிட்டால்... என்ற கேள்வியை எழுப்புகிறார். மாடும் மனிதனும் என்னும் கதையில் மாணிக்கம் பிள்ளையின் மயிலைக் காளைகளுக்கு கோமாரி நோய் வருகிறது. அதே நேரத்தில் முனியனுக்கும் மூன்று நாளாகக் காய்ச்சல், அவன் இறந்து விடுகிறான். அவன் இறந்தும் போகிறான். சரி விடு கழுதையை என்று சொல்லிக் கொண்டு இன்னொருவனை வேலைக்கு அமர்த்துகிறான். இதற்குள் மாடுகள் இரண்டும் செத்துவிடுகின்றன. மாணிக்கம் பிள்ளையின் மனைவி, 'முப்பது வருஷமா வேலை செய்த முனியனே போய்விட்டானே? மாடு போனா என்னவாம்? என்கிறார். அதற்கு அவர் சொல்வார் : “மனுஷ ன் முதல் இல்லாமல் வருவான். மாடு முதல் இல்லாமல் வருமா? என்று கொதிப்புடன் கூறுகிறார். அவர் இந்தக் கதைகளை எழுதிய காலத்தில் தொழிற்சாலைகளில் தொழிலாளர் நலம் கருதிய ஆயுள்காப்பீடு, கிராட்டி விட்டி (தமிழ் : ஓய்வூதியம்) போன்றவை சரியாக வரையறுக்கப்படாத ஒரு காலம் என்பதை மனத்தில் கொண்டு இக்கதைகளை வாசிக்க வேண்டும். இந்த வரிசையில், எத்தனைபேர் என்ற கதையில் மனிதனையும் மிருகத்தையும் ஒப்பிட்டுக் காட்டும் கதையும் குறிப்பிடத்தகுந்தவை. பங்களாவைக் காவல் செய்வதற்கு ராஜபாளையம் நாய்கள் இரண்டை வாங்கித் தீனி போட்டு வளர்ப்பதற்குத் தேவைப்படும் பணத்தைவிட குறைந்த செலவில் பெரியசாமி, சின்னசாமி என்ற இருவரை வேலைக்கு அமர்த்திக் கொள்வது உசிதம் என்று வைரவன் செட்டியார் கருதுகிறார். அப்படி அந்த இருவரை வேலைக்கு அமர்த்திக் கொண்டதற்கு மேலும் சில காரணங்கள் உண்டு. அவற்றை இப்படி எடுத்துக் காட்டுகிறார் விந்தன். நாய்க்கு என்ன தெரியும்? எஜமானனைக் கண்டால் வாலைக் குழைக்கவும், அன்னியரைக் கண்டால் குரைக்கவும் தான் தெரியும். எஜமான் காரில் ஏறும்போதும், இறங்கும்பேதும்