பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 109 கதவைத் திறந்துவிட முடியுமா? ஹாரன் சத்தம் கேட்டதும் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்து பங்களாவின் கேட்டைத் திறந்துவிட அதற்குத் தெரியுமா? இரவில் தூங்குகிறாயோ, உன்னை வேலையிலிருந்து நீக்கிவிடுவேன் என்றும், நின்ற இடத்திலேயே நிற்காமல் போறாயோ! விரட்டிவிடுவேன் என்றும் நாயைப் பயமுறுத்த முடியுமா? இப்படிப் பல செளகரியங்களை உத்தேசித்துதான் அவர் பெரியசாமியையும் சின்னசாமியையும் தமது பங்களாவில் காவல் காக்க வைத்துக் கொண்டார். (விந்தனும் விமர்சனமும் பக்கம் 37) இந்தக் கதையை எழுதிப் பல ஆண்டுகளுக்குப் பின் தினமணியில் பணியாற்றிய போது ஒ மனிதா என்ற கதைத் தொடரை விந்தன் எழுதிய போது பறவைகளையும், மிருகங்களையும் தகுந்த இடத்தில் நிறுத்திக் காட்டி மனிதனைப் பார்த்து அவைகள் கேள்விகளைக் கேட்க வைக்கிறார். ஒ மனிதா, எனக்குள்ள இந்த தைரியமும் தன்னம்பிக்கையும் உனக்கு ஏன் இல்லை - என்று கரிச்சான் குருவி கேட்கிறது. விபத்தில் சிக்கிய ஒருவருக்கு கை கொடுத்த அந்தப் பெண் வேண்டுமானால் என்னைக் கழுதை என்று இகழட்டும். மற்றவர்களுக்கு அப்படிச் சொல்ல என்ன அருகதை இருக்கிறது எனக் கழுதை கேட்கிறது. இத்தகைய பதினாறு கதைகளை விந்தன் எழுதியிருக்கிறார். சில மிருகங்கள் மனிதர்களின் பார்வையில் தகுதிக்கு மீறிய உயர்வை - சில மனிதர்களைக் காட்டிலும் மேம்பாடுடைய நிலையைப் பெறுவதைக் கோபத்தோடு குறிப்பிட்டுக் காட்டும் விந்தன், மிருகங்கள் - பறவைகள் ஆகியவை அவனைப் பாராட்டத் தயாராக இல்லை. அவனைப் பார்த்துச் சிரிக்கின்றவையாகவும், அவனுக்கு அறிவு கற்பிக்கும் தகுதி படைத்தவையாகவும் இருப்பதை விந்தன் சுட்டிக் காட்டியுள்ளார். காட்டு மலர்களைப் பாருங்கள், காகங்களை கவனித்துப் பாருங்கள். அவை விதைப்பதும் இல்லை அறுப்பதுமில்லை. அது கவலை கொண்டு வாழ்வதுமில்லை என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறிக் காட்டிய நெறியைச் சார்ந்து விந்தன் அக்கதைகளை எழுதியுள்ளார் என்று கூறலாம்.