பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 113 அந்தக காட்சியைப் பரிபூரணமாகப் பார்த்தபோது அவர்கள் ஏன் அப்படி முகத்தைச் சுளிக்க வேண்டும்? அப்போதெல்லாம் உறங்கிக் கொண்டிருநத அவர்கள் மனிதத்தன்மை இப்போது விழித்துக் கொண்டதோ? காந்திய வாதி என்ற கதையில் போலி காந்திய வாதியான தோல் மணங்குடி துளசிரங்கராயர் என்பவரைத் தோலுரித்துக் காட்டி விடுகிறார். ஊர்க் குழந்தைகளுக்குப் பட்டாசு தானம் செய்கிறேன் என்று அவர் வைப்பாட்டிகள் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார். அவருடைய சுயரூபத்தை குப்புலிங்கம் என்ற பாத்திரத்தின் வாயிலாக விந்தன் வெளிப்படுத்திவிடுகிறார். நான் எட்டிப் பார்த்தேன். என்ன ஆச்சரியம். ஏழெட்டுப் பெண்களுக்கு நடுவே எங்க ஊர் காந்தி எழுந்தருளியிருந்தார் மேலே ஒரு துண்டும் கீழே ஒரு துண்டும் வழக்கமாக இருக்கும் பாருங்கள். அவற்றைக் கூட மறந்து அவர் எளிமையின் உச்சிக்கே போய், வாய்மையையும் தூய்மையுைம், பண்பையும், பாரம்பரியத்தையும் அங்கே வளர்ததுக் கொண்டிருந்தார். விந்தனின் கதைகள் அவர் வாழ்ந்த சமுதாயக் காலக் கட்டத்தைப் பின்னணியாக வைத்து வாசிக்கப்பட வேண்டியவை ஆகும். அது முதலாளித்துவ சமூகம் அடக்குமுறைகள் உள்ளான வர்க்கத்தினர்களின் போராட்டம் பெருகிக் கொண்டிருந்த காலம் இதை ஆய்ந்து விந்தன் சிறு கதைகளுக்குத் தாமரை இதழில் 1978ஆம் ஆண்டில் விமர்சனம் எழுதிய திரு.எஸ். தோதாத்ரி கூறியிருப்பது நம் சிந்தனைக்கு உரியதாகும். 'இந்தக் காலப்பகுதியை சமூக இயல் அடிப்படையில் காணும் பொழுது வர்க்க முரண்பாடுகள் தீவிரமான காலம் என்று கூறலாம். இந்த முரண்பாடுகள் தமிழகத்திலும் தீவிரம் பெற்று விளங்குகின்றன. இவற்றைத் தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்கள் எந்த அளவிற்கு சுவீகரித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதைக் காணும் பொழுது விந்தனின் ஸ்தானம் நமக்குத் தெளிவாக விளங்கிவிடும்.