பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 விந்தன் இலக்கியத் தடம் இக்கதையின் முடிவு சோக முடிவாக இருப்பதால் விந்தன் எவ்வளவுதான் தீவிரமாகக் கருத்துக்களைக் கூற முயன்றாலும் சமுதாயத்தைத் தாக்கி இருந்தாலும் ஆண்களால் மாசுபடுத்தப்பட்ட பெண்ணுக்குத் தற்கொலையைத் தவிர வேறுவழியில்லை என்ற பழைய புளித்துப் போன தத்துவத்திற்கு சப்பை கட்ட முன்வநதிருக்கிறார் என்று விந்தனைச் சிலர் விமர்சிக்கவே செய்தனர். என்றாலும் விந்தன் தம்முடைய முன்னுரையில்... பெண் குலத்தை மாசுபடுத்துவதற்காக நான் இந்தக் கதையை எழுதவில்லை. தூய்மைப் படுத்துவதற்காகவே எழுதியிருக்கிறேன். இந்தக் கதையில் வரும் அகல்யாவிடம் எவ்வித வெறுப்பும் எனக்கு இல்லை. அவர் பணக்கார வர்த்தகத்தைச் சேர்ந்தவள் என்று குறிப்பிடும்போது மட்டும், எனக்கு அந்த இனத்தின் மேல் இயற்கையாக உள்ள வெறுப்பை ஓரளவு காட்டியிருக்கிறேன்.” (விந்தனும் விமர்சனமும் பக் 51, 52) ‘இன்றைய உலகத்தில் நாம் காண்பது என்ன? பொருள் இல்லாவிட்டால் காதல் புகைகிறது அல்லது காதலாகள் மயானத்தில் புதைந்து விடுகிறார்கள் - விந்தன் மேலும் ஆணின் ஆதிக்கமும் இன்றையச் சமுதாயச் சீரழிவுக்கு சிறப்பாகப் பெண்களின் விபரீத முடிவுகளுக்குக் காரணமாகிறது. இதை விந்தன் கூற வரும்பொழுது, 'இதில்கூட சமூகத்தில், ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதி என்ற அநியாயப் போக்குதான் வளர்கிறது. காதலில் தோல்வி கண்ட ஆண், வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செயது கொண்டு, சுகமாக வாழ அனுமதிக்கப்படுகிறான் ஆனால் காதலனால் கைவிடப்பட்டு, காதலில் தோல்வி கண்ட பெண், கெட்டுப் போனவள் என்று பலராலும் பழிக்கப்படுகிறாள் அவளுக்குப் புது வாழ்வு சித்திப்பதற்கு வாய்ப்புகளும் வசதிகளும் இலலாமலே போகின்றன. அவள் சமூக மனிதர்களால் வெறுத்து ஒதுக்கப்படுகிறாள்; மேலும் கெட்டுப் போவதற்கு - அல்லது செத்து ஒழிந்து போவதற்காக - துண்டப்படுகிறாள். (விநதனும் விமர்சனமும் பக். 52, 53)