பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 117 அகல்யாவுக்கு ஏற்பட்ட இழிவும், இழப்பும் மற்ற பெண்களுக்கு ஏற்படக்கூடாது, அவர்கள் அறிவிழக்காமல் தற் பாதுகாப்போடு வாழ வேண்டும். பெண்ணினத்தின் பெருமையைப் பேணிக் காக்க வேண்டும் - இந்த அறிவுரையும் அறைகூவலும் பாலும் பாவை நூலிலிருந்து வெளிப்படவே செய்கின்றன. திருவாரூர் தங்கராசுவின் ரத்தக் கண்ணர் மற்றும் டாக்டர் மு.வ. வின் அகல்விளக்கு ஆகிய இரண்டு படைப்புகளிலும கதாநாயகர்கள் வாயிலாக ஆணினத்திற்கு வலியுறுத்தப்படுகின்ற உண்மையே அகல்யாவின் மூலமாகப் பெண்ணினததிற்கு வலியுறுத்தப்படுகிறது என்று கொள்ளலாம். எல்லா நாவல்களுமே இநதப் பாணியில் முகாரி ராகத்தோடு முடிய வேண்டிய அவசியம் இல்லை. புரட்சிக் கருத்துக்கள் செயல்வடிவம் பெறுவதைக் காட்டும் முடிவுகளைக் கொண்ட நாவல்கள் சிங்கார வேலர், வ ரா. ஆகியோரின் காலத்திலிருந்தே வெளிவந்துள்ளன. பால் கெட்டுப் பேனால் அதைக் கொட்டிவிட வேண்டியதுதான் என்ற சமையலறைக் கருத்து ஒரு புறமிருக்க, மன்னிக்கும் மனப்பான்மை உடையவன்தான் மனிதன் என்ற உயர்ந்த கொள்கையை வலியுறுத்துவதாய் அமைந்தது. டி கே.எஸ் அமைப்பின் மனிதன் என்னும் நாடகம் சிதம்பரம் காவல் நிலையத்தில் கற்பழிக்கப்பட்டு விதவையும் ஆகிவிட்ட பத்மினி என்ற பெண்ணுக்கு மறுமணம் நடந்திருப்பது ஒருவேளை இலக்கியப் படைப்பாளர்களின் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டதாகவும தோன்றலாம். பாவை என்பவளுக்கு பால்போன்ற வெள்ளை மனமும் பாலுக்குள்ள ஊட்டச்சத்தும தேவை என்பது உண்மை அதே நேரத்தில் சில சிதைவுகளே அவளைச் சீரழிதது மாயததுவிடும் என்று சொல்லிவிட முடியாது. ஆண் பென கற்பு பற்றிப் பேசும்போது டாக்டர். மு. வ இருபாலாரின் திருமணத்திறகு முந்திய வாழ்க்கையை விட திருமணத்திற்குப் பிந்திய வாழ்க்கையிலேயே கற்பு என்பது நிலைநிறுத்தப்பட வேண்டிய ஒன்றாகிறது என்கிறார். இந்த நோக்கிலெல்லாம் சமுதாயத்தைப் பாாக்கத் தவறியவர் அல்ல விநதன். சில அழுத்த நிலைகள ஒட்டி அவர் பாலும