பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 விந்தன இலக்கியத் தடம் இல்லையெனினும் கணவரின் அன்பு கிஞ்சித்தும் இல்லாதது வருத்தமே. கணவர் வீட்டாரைப்பற்றிச் சொல்லும் பொழுது தன் வீட்டாரையும் சேர்த்தே சொல்கிறாள். தெரிந்த ஊரைவிட்டு, பிறந்த வீட்டைவிட்டு, பெற்ற தாயைவிட்டு, வளர்த்த தந்தையை விட்டு, தெரியாத ஊருக்குள் நுழைந்தேன்; பிறக்காத வீட்டுக்குள் புகுந்தேன்; பெற்ற தாயின் பிரிவுக்குப் பதில் வாய்த்த மாமியின் கொடுமையைக் கண்டேன்; என்னை விட்டுக் காரியம் செய்ய விடாத தந்தைக்குப் பதில் எடுத்ததற்கெல்லாம் என்னையே காரியம் செய்யவிடும் மாமனாரைக் கண்டேன். இவர்கள் மட்டுமா? தினந்தோறும் காலை இரண்டு மணிக்கே எழுந்து, நான் அடுப்பைக் கட்டிக் கொண்டு அழ வேண்டுமென்பதற்ாக, அடுத்த ஊரிலுள்ள கலாசாலையில் படிக்கும் இரண்டு மைத்துனன்மார், மாமியார் தினசரி என்னுடன் மல்லுக்கு நிற்பதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஒரு மைத்துனியும் இருந்தாள். மாடும் ஒன்று இருந்தது. ஆனால், அவர் மட்டும் என்னிடம் அன்பாயிருந்திருந்தால் இத்தனை துன்பங்களும் என்னை ஒன்றும் பாதித்திருக்காது. பாதித்திருக்கவும் முடியாது என்று கூறுகிறேன். கணவனின் அன்புக்காக ஒவ்வொரு நிமிடமும் ஏங்குகிறாள். பாறையில் நீர் வந்த கதையாயிருந்தது. பாறையில் நீர் சுரக்குமே தவிர, இவளது கனவனின் நெஞ்சுப் பாறையில் மறந்தும்கூட அன்பு சுரந்ததே யில்லை. ஆனால் கனவனின் அன்புமட்டும் அவளுக்குக் கிடைத்திருந்தால் மற்றவைகள் அவளுக்குத் துச்சமாக இருந்திருக்கும். கணவனின் அன்பும் இல்லாதது அவளுக்கு எல்லாமே பூதாகாரமாகத் தோன்றுகின்றது. 'அன்பிலா ரெல்லாத் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” (குறள் 72)