பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 127 காதலையே பெரிதென எண்ணிப் பெற்றவர்களைத் துறந்து காதலன் முருகேசனுடன் வந்து விட்டாள் சொக்கி தன் தந்தை கையில் கத்தியுடன் முருகேசனைத் தேடி வர, தமிழ்நாட்டுப் பெண்களுக்கென்றே இயற்கையாயமைந்த குணத்தினால், முருகேசனைப் பின்னால் தள்ளிவிட்டு, 'அப்பா, நான் சொல்றதைக் கேளுங்கப்பா! நீங்க என்ன தப்பு பண்ணினாலும் இனிமே கெட்ட பால் நல்ல பாலா ஆகப் போறதில்லே! அவரைக் கொன்னுட்டா யாருக்கு நஷ்டம் ? எனக்குத்தானே? நான் கஷ்டப்பட்டா உங்களுக்குக் கஷ்டமாயிராதா, அப்பா? என்று உருக்கமுடன் கேட்கிறாள். அவள் கேள்வி தந்தையின் ஆத்திரத்தைத் தணிக்கிறது. தன் அறிவினால் உணர்ச்சியை வென்று விடும் ஆற்றல் மிக்க பெண்ணாகத் தோன்றுகிறாள் சொக்கி, தாய், தந்தையை இழந்த அநாதைப் பெண் நீலா, தன் மாமன் மகனை மணக்க விரும்புகிறாள். அவளை வளர்க்கும் சித்தப்பாவோ, வேறு வரன் பார்க்க, தனக்கு அந்த வரனை மணந்து கொள்ள விருப்பமில்லை எனத் தைரியமாகக் கூறிவிடுவதுடன், பலர் முன்னிலையில், தான் மாமன் மகனை மணக்க விரும்புவதையும் தெரிவிக்கிறாள். இம்மூன்று பெண்கள் வாயிலாகவும், மென்மையான இயல்பு கொண்ட பெண்கள், தங்களுக்குப் பிரச்சினை என்று வந்தால் ஆவேசம் கொண்டு பொங்கி எழுவதற்குத் தயங்க மாட்டார்கள். பிறர் உதவியை நாடாது, தங்கள் பிரச்சிைையத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு என்பதைக் காட்டியுள்ளார் விந்தன். திருமணமான பெண்கள் விந்தன், திருமண வாழ்வில் ஈடுபட்ட பின்னர், வறுமையில் உழலும் பெண்களாக, தங்க வளையல் எனும் கதையில், அஜ்ஜா, பத்தினித் தெய்வம் கதையில் முத்தம்மா இன்ப துன்பம் கதையில் பரிமளா, சந்தோஷமாய் முடியும் கதையில் தனகோட்டி ஆகியோரைப் படைத்துள்ளார். இவர்கள் நால்வருமே குறள்வழி வாழும் குலப் பெண்டிர்.