பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 2 8 விந்தன் இலக்கியத் தடம் தன்னைக் கயவன் ஒருவன் பொருளாசை காட்டிக் கடத்திச் செல்லும்போது, 'சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை - எனும் வாய்மொழிக்கு இலக்கணமாக, கற்பே பெரிது என்னும் உயரிய கொள்கையுடன் தன் உயிரை விடுகிறாள் முத்தம்மா. காலாகாலமாக, கயமைக்குப் பலியாகும் பெண்களின் அவலநிலை முத்தம்மா மூலம் சித்திரிக்கப்படுகிறது. குடிகாரன் ஒருவனுக்கு மகளாகப் பிறந்தாலும் அஜ்ஜா சிறந்த பண்புகள் கொண்டவள். தன் கணவன் தனக்காக வாங்கி வந்த தங்க வளையல்கள் திருட்டுப் பணத்தில் வாங்கியவை எனத் தெரிந்தவுடன், அவன் மனதை மாற்றக் கடிதம் எழுதிவிட்டு, எங்கோ சென்று விடுகிறாள். அவன் திருந்தியவுடன் அவனோடு இனைகிறாள். வறுமையில் செம்மை கொண்டு திகழும் அஜ்ஜா, களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும்’ என்பதை அறிந்தவளாக வருகிறாள். முக அழகோடு அக அழகும் அஜ்ஜாவை அணி செய்கிறது. தான் காதலித்த வனை மறந்து, தன் தங்கையின் நல்வாழ்விற்காக, நான்கு குழந்தைகளின் தகப்பனுக்கு இளையாளாக வாழ்க்கைப்பட்ட பரிமளா, தந்தையின் பாரத்தைக் குறைத்து. தன் மனதையும் பக்குவப்படுத்திக் கொள்கிறாள். 'பார்க்கப் போனால், இந்த உலகமே என்னத்திற்கு? என்று எனக்குத் தோன்றுகிறது. அது இருக்கத்தானே நாம் வாழ்க்கை என்று ஒன்றை ஆரம்பித்துவிடுகிறோம்? அந்த வாழ்க்கையில் காதலென்றும் சாதலென்றும் கதைத்துக் கொண்டு கண்ணிர் விடுகிறோம்? இன்பமென்றும் துன்பமென்றும் எண்ணி இன்னலுறுகிறோம்? எல்லாவற்றுக்கும் காரணம் நம்முடைய கற்பனைதான். இந்தத் தொல்லை தொலைவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அந்த வழி துன்பத்தையும் இன்பமாகக் கருதுவதே என அவள் தோழிக்கு எழுதும் கடிதவரிகள் அவளது மனநிலையைத் தெற்றெனப் புலப்படுத்துகிறது.