பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 129 'இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையும் சிறப்பு' எனும் குறளுக்கு இலக்கணமாய்ப் பொலிகிறாள் பரிமளா, திருமணத்திற்குப் பின் வளமாக வாழும் பணக்காரப் பெண்களாகப் பொன்னையா என்ற கதையில் பத்மாவையும் விதி வென்றதா என்ற கதையில் எஜமானியம்மா ஒருத்தியையும் விந்தன் படைத்துள்ளார். இவர்கள் இரு வருமே சாதி வெறி கொண்டவர்களாக வருகின்றனர். இருவருள்ளும் பத்மா தன் கணவனின் கெளரவத்தைக் காப்பாற்ற பணத்தைக் கொடுத்து தன் சாதி வெறியை மறைத்து விடுகிறாள். இதனால் பெண்புத்தி பின்புத்தியல்ல என்று கணவனால் பாராட்டப்படுகிறாள். மற்றவரோ மனிதப் பண்பே இல்லாமல் தன் வீட்டில் நாள் முழுவதும் உழைத்துக் களைத்து வரும் குப்பனுக்குக் கூழ் ஊற்றுகிறாள்; கழுதை என்று அவனை ஏசுகிறாள்; குப்பையில் போட வேண்டிய வாடிப் போன வெற்றிலையைக் குப்பன் மனைவிக்குக் கொடுக்கிறாள். இவர்களைத் தவிர, நாத்தனார் என்ற கதையில் வரும் கந்தசாமியின் அக்கா கங்கம்மா, தம்பி மனைவி வஞ்சியைக் காரணமின்றித் தொல்லைப்படுத்துவதாக ஆசிரியர் படைத்துள்ளார். முடிவுரை விந்தன் படைத்துள்ள பெண்களை நோக்குமிடத்து, பெண்கள் நிலை பற்றி விந்தன் கொண்டிருந்த சமூகப் பார்வை புலனாகின்றது. வறுமையில் வாழும் குடும்பங்களில் பெண்களின் திருமணம் பெரிய பிரச்சனையாகத் திகழ்வதையும், வளமான வாழ்வு வாழும் பெண்கள் அதிகார உணர்வு கொண்டு, தாங்கள் பிறரைவிட மேல் என்ற ஆணவ நிலையில் இருப்பதையும், இளைய தலைமுறைப் பெண்கள் உறுதி கொண்ட நெஞ்சினராய், பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் விளங்குகிறார்கள் என்பதையும் விந்தன் முல்லைக் கொடியாள் தொகுப்பின் வாயிலாகத் தெளிவுறுத்தியுள்ளார். 1998 {