பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 131 சிறுகதை, நாவல், திரைக்கதை, வசனம், பத்திரிகை எனப் பல்வேறு துறைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர் விந்தன் அவர்கள். செந்தமிழ் நாட்டிலே என்ற சிறுகதை நம்மிடையே வாழ்ந்த ஒருவரின் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுவதைப் படித்தவர் நன்கு உணர்வர். கதைச் சுருக்கம் வயிற்றுப் பிழைப்பைக் கேவலமாக நினைக்கும், கொள்கைக்காக வாழும் எழுத்தாளர் சதானந்தம் அவர்கள், சூரிய கிரகணத்தன்று கடலில் முழ்கியதாகவும், அவர் இறந்ததால் அவரது குடும்பத்தாருக்குப் பத்திரிகையாசிரியர்கள் தரும் மரியாதை, விளம்பரங்கள் இவைகளைக் குறித்து அங்கதச் சுவையுடன் குத்தலாக எடுத்துக்காட்டுகிறார் விந்தன் அவர்கள். கதையின் முடிவில் ஆசிரிரே ஒரு பாத்திரமாக வெளிப்பட்டு, சிக்கலை அவிழப்பதாகக் கதை முடிகிறது. அதாவது, ஆசிரியருக்கு (நண்பன்) ஒரு தந்தி வருவதாகவும் அதில் சதானந்தம் தன்னை நேரில் பார்க்க அழைப்பு விடுத்ததாகவும் அமைந்துள்ளது. சதானந்தம் அவர்கள், தமிழ்நாட்டில் பிழைக்க முடியாமல் வடநாட்டுக்குச் சென்று வக்ரநாத்ஜி என்று தம் பெயரை மாற்றிக் கொண்டு, இந்தியில் நாவல்கள் எழுதி அவை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவருகின்றன என்று அவர் கூறுவதிலிருந்து, சதானந்தம் இறக்கவில்லை என்ற உண்மை வெளிப்படுவதோடு நம் நாட்டின் அவலமும் சேர்ந்து மனத்தை நெகிழவைக்கிறது. இக்கதையைப் படிக்கும்போது நமக்கு மறைந்த மகாகவியின் நினைவுவர, இந்த ஐயத்தை, விந்தன் அவர்களே நீக்கியும் விடுகிறார். சதானந்தமும் நண்பரும் (விந்தன்) உரையாடும் உரையாடலிலிருந்து ஒரு பகுதி. 'அமரகவி பாரதியார் கூட ஒரு வேளை உங்களைப் போல் தான் எங்கேயாவது இன்னும் யாத்திரை செய்து கொண்டிருப்பாரோ? "அவர் அப்படிச் செய்திருந்தால்தான் இன்னும் ஜீவிய வந்தராயிருக்கலாமே என்றார் அவர்.