பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 133 முழுகிப் போனாள். இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு சதானந்தம் பட்ட பாடு கொஞ்சம் நஞ்சமல்ல. அப்போதெல்லாம் அவனைக் கவனிக்காத தமிழுலகம் இப்பொழுதோ? (பக்கம் 144) என்று நம் நாட்டின் நிலைமையை விளக்குகிறார் நாடு - அவலம் கடலில் மூழ்கிவிட்டார் என்றவுடனே மக்கள் கண்ணிர் வடித்தனர். ரசிகர்கள் கூட்டம் கூட்டி, சதானந்தம் சகாயநிதி திரட்டி அவரது குடும்பத்தார்க்கு அனுப்பி வைத்தனர். அவரது நடையிலேயே, மக்களின் மன இயல்பினைப் பார்ப்போம். அன்று அவர் பெயரைச் சொல்லி அவரே பிழைக்க முடியவில்லை; இன்றோ அந்த மனிதனின் பெயரைச் சொல்லி எத்தனைபேர் பிழைக்கின்றனர் (பக்கம் 146) என்ற அவரது எழுத்துக்கள் உண்மையைத் தெற்றென விளக்குகிறது. முடிவுரை ஆழ்ந்து சிந்தித்துத் தெளிவாகத் தம் படைப்பின் மூலம் கவிஞர்கள், படைப்பாளிகள், ஏழைகள் இவர்களின் வாழ்வில் படும் துன்பத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இக்கதை மூலம், நம் நாட்டில் வாழும் பணக்காரர்கள், படித்தவர்கள் இவர்களின் உள்ளப்பாங்கு, மேதாவித்தனம், நன்கு விளக்கி, எழுத்தையே தொழிலாகக் கொண்ட தமிழறிஞர்கள் தம் வாழ்வில் படும் துயரங்களை இவரைவிட இனி ஒருவர் சித்திரிக்க இயலாது என்ற வகையில் எழுதியுள்ளார். இவர் பல்லாயிரக்கணக்கான எழுத்தாளர்களில் ஒருவர் அல்லர். லட்சத்தில் ஒருவர். இலக்கணத்துக்கு இலக்கணமானவர் என்பது வெள்ளிடைமலை, 1998