பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கண்திறக்குமா - நீல. பத்மநாபன் மோகன லட்சியங்களும் உயர்ந்த குறிக்கோள்களும் ஒரு கட்டத்தில் இல்லாவிடில் இன்னொரு கட்டத்தில் எல்லா மனிதர்களிடமும் ஆட்சி செலுத்துகின்றன. ஆனால் எல்லோருடையவும் எல்லா லட்சியங்களும் சாட்சாத்கரிக்கப்படுகின்றவா? லட்சியவாதிகளாய் வாழ்வை ஆரம்பித்தவர்கள் எத்தனை பேர்கள் இறுதி மூச்சு வரை அந்த லட்சியங்களுக்காகப் போரடிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். குறிப்பிட்ட குறிக்கோள் எதுவும் இல்லாதவர்கள் சுகமாய் - அனாயாசமாய் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, லட்சியச் சிலுவைகளைச் சுமக்கிறவர்கள் ஒவ்வொரு சுவடியிலும் அனுபவிக்கும் சித்ரவதைகள் கொஞ்சநஞ்சமா? இன்றைய அரசியல், சமூகப் பொருளாதாரத் துறைகளில் மட்டுமின்றி, கலை இலக்கியங்களிலும் உயர்ந்த லட்சிய வாதிகளாய்ப் பேசித் திரிந்தவர்கள் தன் இருத்தலை நிலை நிறுத்திக் கொள்ள எப்படி எப்படியெல்லாம் மறு அவதாரங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நித்தம் நித்தம் கண்டு கொண்டுதானே இருக்கிறோம். இங்கே விந்தனின் கண் திறக்குமா? நாவலில் வரும் செல்வம், இந்த 242 பக்க நாவலில் 236வது பக்கம் வரை தன் லட்சியத்திலேயே, கொண்ட கொள்கையிலேயே காலூன்றி நிற்கிறான். ஆனால் 237ஆவது பக்கத்தில் தன் லட்சியத்திற்கு முழுக்குப் போட்டு விட்டு மறு அவதாரம் செய்து விடுகிறான்.