பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம 135 அந்நிய ஆட்சியின் அடிவருடியாய் ஒரு காலத்தில் இருந்த பாரிஸ்டர் பரந்தாமனைப் போன்றவர்கள் எத்தனை எளிதில் ஆட்சி அமைப்புக்கு ஏற்றவாறு கோலத்தை மாற்றிக் கொண்டு அமைச்சர் பதவி வரை பெற்று விடுகிறார்கள் என்பதையும் காண்கிறோம். பணம் பண்ணுவது மட்டுமே இந்தச் சந்தர்ப்பவாதிகளின் குறிக்கோள் என்று சொல்லிவிடமுடியாது. இன்றைய வாழ்வில் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இந்த மூவாசைகளை விடவும் அசிங்கமான - கொடுமையான இன்னொரு ஆசை பலரையும் பேயாய்ப் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நான்காவது ஆசை எது என்பதை இந்நாவலின், கீழ் குறிப்பிட்டிருக்கும் பாரிஸ்டர் பரந்தாமனின் சொற்களிலிருந்து (பக்கம் 191-192) கண்டு கொள்ளலாம். 'இந்த ஜனநாயகம், சுதந்திரம் என்பதெல்லாம் ஒரு சிலர் பேரும் புகழும் அடைவதற்கும், பட்டமும் பதவியும் பெறுவதற்கும்தான் உபயோகமாயிருக்கு மே தவிர, மக்களின் நல்வாழ்வுக்கு வழி காட்டுவனவா யிருக்காது! எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் இந்த அரசியல் என்பதே வெறும் பித்தலாட்டம்தான். மக்கள் உண்மையிலேயே நல்வாழ்வு பெற விரும்பினால் தங்களைத் தாங்களே நம்ப வேண்டுமே தவிர வேறு எதையுமே, எவரையுமே நம்பக் கூடாது. நாமும் அப்படித்தான்; நம்முடைய நல்வாழ்வுக்கு நம்மை நாமே நம்ப வேண்டும். அப்படி நம்பிக் கொண்டு ஏழை களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம்; என்ன வேண்டுமானாலும் எழுதலாம். எதைப் பற்றிப் பேசினாலும் சரி, எதைப் பற்றி எழுதினாலும் சரி - கருமத்தில் மட்டும் கண்ணாயிருக்க வேண்டும். அந்தக் கருமம்தான் பயணத்தையும் பதவியையும் தேடுவது; பேரையும் புகழையும் நாடுவது. இவற்றை நேரான முறையில் அடைவது முடியாத காரியம். எனவே, பித்தலாட்டம் செய்வதில்தான் அவற்றைச் சுலபமாக அடைய முடியும்.'