பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 விந்தன் இலககியத் தடம் 'ஆனால் அதைப் பித்தலாட்டம் என்று சொன்னால் அவ்வளவு நன்றாயிராதல்லவா? அதற்காகத்தான் அதை ராஜதந்திரம் என்று சொல்வது.” இத்தகைய மணிமொழிகள், ஏனைய சில விந்த ன் நாவல்களில்போல் இந்நாவலிலும் நெடு நீளத்தில் காணப்படுகின்றன. கதாபாத்திரங்கள் எல்லோரும் கொஞ்சம் அதிகமாகவே பேசுகிறார்கள்; ஏன், எப்போதும் இப்படி பேசிக் கொண்டே இருக்கிறார்கள் என்று நாம் நினைக்கும் அளவுக்கு! எல்லோரும் உலகின் கோணங்களை, ஏற்றத்தாழ்வுகளை, தாண்டல்களை, அரசியல் மோசடிகளை, இப்படி சமகால சமூகப் பிரச்னைகளை ஒரு தார்மீகக் கோபத்துடன் இங்கே அலசுகிறார்கள். இவர்கள் எல்லாம் அவரவர்களுக்கென்று ஒரு தத்துவம் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பேச்சில் தீவிரமும் இருக்கிறது; அதிகமாய் பட்டுக்கொள்ளாமல் விலகி நின்று நையாண்டி செய்யும் பாணியும் இருக்கிறது. எது காரிய கெளரவத்துடன் பேசப்படுகின்றது, எது கிண்டல் செய்யப்படுகிறது என்று வாசகர்களையும் திணறடிக்கும் அளவுக்கு இவை ஒன்று கலந்து இருக்கின்றன க.நா.சு சொல்லும் கட்டுரைக் கதை விந்தன் கதை சொல்லும் பாணிக்கும் மிக அருகில் வருகிறது. அதிகமாய் பட்டுக்கொள்ளாதிருத்தல், நையாண்டி - இப்படியெல்லா மிருப்பினும் சில வேளைகளில் உள்ளே துளைக்கும் விகடாலங்காரத்திற்கும் குறைவில்லை. மாதிரிக்கு, கண் திறக்குமா? நாவலில் (பக்கம் 229ல்) சில வரிகள் : 'சில தேச பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நாள் இருபத்திநான்கு மணி நேரமும் தேசத்துக்காகவே உழைக்கிறார்கள். அதிலும் உள்ளூரில் இருந்து கொண்டே உழைக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை; அடிக்கடி வெளியூர் செல்கிறார்கள் - எப்படி? கால் நடையாகவா? - இல்லை.” ‘ரயிலில் ஏறிக்கொண்டு ஓடுகிறார்கள் ஆகாய விமானத்தில் ஏறிக்கொண்டு பறக்கிறார்கள்; காரில் ஏறிக்கொண்டு அலைகிறார்கள் - இத்தனைக்கும் அவர்கள் உடம்பு கொஞ்சமாவது இளைக்கிறதா? -