பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 விந்தன இலக்கியத் தடம் கல்யாணமும், பாலும் பாவையும் முதலிய நாவல்களில் போல் இந்தக் கண்திறக்குமா?விலும் வருகிறார்களே! ஆனாலும் இந்த நாவலிலும் செல்வம் - சந்தியா லட்சியக் காதலும் வரத்தான் செய்கிறது, காதலும் கல்யாணமும் பாமா - மோகன் போல்! காதலும் கல்யாணமும் நாவல் முன்னுரையில் (காதல் வாழ்க!) க.நா.சு. சொல்லியிருப்பது இங்கே இந்தக் கண்திறக்குமா? செல்வம் - சந்தியா காதலுக்கும் பொருந்தும். 'மற்ற லட்சியங்கள் எல்லாம் என்னவானாலும் காதல் என்கிற லட்சியம் இருக்கிறதே, அது எழுத்தாளர்கள் உலகில் உள்ள அளவும் மறையாது என்றுதான் தோன்றுகிறது அந்த லட்சியம் அஸ்தமித்துவிட்டால் தமிழ் நாவலாசிரியர்கள் சரிததிரக் கதைகளோ, சமூகக் கதைகளோ எழுத முடியாமல் போய்விடும் என்பது வெளிப்படையாகவே தெரிகிற ஒரு உண்மையாகும். 'நான் இரண்டாவது பெண்டும் படைத்தவன். ஆகவே எனக்கே காதல் விஷயம் தெரியும எனறு சொல்லுகிற தமிழ் நாவலாசிரியனும். 'வால்மீகி பெண்டில்லாதவர் - அவருக்கே விஷயம் தெரியும் என்று சொல்லுகிற முதுகிழ இலக்கியாசிரியரும் ஒரு சில விஷயங்களையேனும் (காதலைப்பற்றி) இந்த நாவலைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. காதல் வாழ்க! இந்தக் கண் திறக்குமா? நாவல் 1956ல் நூல் வடிவம் (முதற்பதிப்பு) பெற்றிருப்பதாய்த் தெரிகிறது. அதற்கு முன்பு பொன்னி பத்திரிகையில் நக்கீரன் என்ற புனை பெயரில் தொடராய் இந்த நாவலை விந்தன் எழுதினாராம். அது சம்பந்தமாய் கல்கியுடன் நடந்த ஒரு சம்பாஷனையை நூல் முன்னுரையில் (வயிறும் வாழ்வும்) விந்தன் நாடகீயமாகச் சொல்லியிருப்பது அன்றைய (இன்றையவும்தான்) பத்திரிகை ஆசிரியர் என்ற முதலாளி - எழுத்தாளன் எனற தொழிலாளி உற வைப் பற்றித் தெரிநது கொள்ளவும். மேலே சிந்திக்கவும் உதவும். 'கல்கி காரியாலயத்தில் வேலை பார்க்கும் நீங்கள் வேறெந்தப் பத்திரிகைக்கும் கதையோ கட்டுரையோ எழுதக்கூடாது என்ற