பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 139 விஷயம் உங்களுக்குத் தெரியுமா? என்று தமக்கே உரித்தான கம்பீரத்துடன் அவர்கள் (கல்கி) கேட்டார்கள். தெரியும்! என்றேன் நான். சரி, இந்தப் பத்திரிகையில் வெளியாகியிருக்கும் தொடர்கதை யாருடைய தொடர்கதை? தெரியாது! உங்களுடைய தொடர்கதை என்று பலர் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்களே, அதற்கு என்ன சொல்கிறீர்கள்? அவர்கள் ஒரு வேளை என்னுடைய விரோதிகளாயிருக்கலாம்! இல்லை. உங்களுடைய அபிமானிகள்தான் அப்படி எழுதியிருக்கிறார்கள். அத்துடன் கல்கியில் ஏன் அவர் தொடர்கதை எழுதக்கூடாது என்றும் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் நாசமாய்ப் போகட்டும்! என்று மனத்துக்குள் சபித்துக் கொண்டே நான் பலிபீடத்தில் நிற்கும் ஆடுபோல் நின்றேன். இத்தகைய புயலுக்கும் பூகம்பத்துக்கும் என்னை உள்ளாக்கி, நண்பர் திரு முருகு சுப்பிரமணியம் அவர்களைப் பொன்னி வாசகர்களிடம் திண்டாட வைத்த கதையே கண் திறக்குமா? கதை; அதற்காக நான் எடுத்த அவதாரமே நக்கீரன் அவதாரம்! ஏன் எடுத்தேன்? காலமெல்லாம் என்னைத் தொழுது, கடைசியில் இரணியன் கையிலோ முதலையின் வாயிலோ சிக்கிக் கொண்டே பக்தனைக் காப்பாற்றவா? இல்லை, என்னை நானே காப்பாற்றிக் கொள்ளத்தான்! இன்றும், நம் தமிழ்ப் பத்திரிகைகளில் வேலை பார்க்கும் எழுத்தாளர்கள் மட்டுமல்ல, அல்லாத எழுத்தாளர்களும் இத்தகைய கொத்தடிமைத் தனத்திலிருந்து அடியோடு சுதந்திரம் பெற்றுவிட்டார்கள் என்று சொல்ல முடியுமா? 1982