பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 விந்தன் இலக்கியத் தடம் அதனால்தான், வாழ்க்கைக்குக் காதலை உயிர் நாடியென மதித்த அகல்யா, காதலை இழந்ததுடன் நிற்காமல், கற்பையும் இழந்து, என்னைப் போனறவர்களை உங்களைப் போன்ற இதயமுள்ளவர்கள்தான் ஆதரிக்க வேண்டும் என்று பீடிகை போடத் துணிகின்றாள் போலும்! நப்பாசையின் தோள்களை நைந்த ஆசை பற்றுவதற்கு முன்னமேயே, அவர்களுக்குள் காதல் மறுபிறவி எடுத்து விடுகிறது. காதல் எனும் பசியை அடக்கித் துரங்க வைக்கக் காசு பணம் குவிக்க வேண்டுமென்று தவம் இருக்கிறான் கனகலிங்கம். ஒன்றியாகப் போனவன், கலைஞான புரத்திலிருந்து திரும்புகையில், ஒன்றில் ஒன்றாகத் திரும்புகிறான். ரயிலடியில், அவனுடன் அகல்யாவைக் கண்ட அவனது முதலாளி, அவனைத் தவறுபடக் கருதிவிடுகிறார். வந்தது ஆபத்து! அவனே தன் தமையனாரின் மகளைக் கெடுத்தவன் என்று தீர்மானித்து, அவனை வேலையை விட்டு நீக்கியதோடு திருப்தி கொள்ளாமல், அவனை ஆள் வைத்துக் கொன்று உலகத்தை விட்டே நீக்கிவிடுகிறார்: அகல்யாவைக் கெடுத்தவனோ இந்திரன்! ஆனால், ஆள் மாறாட்டம் உம்மைப் பழவினையின் உருவத்தில் வந்து சிரிக்கிறது. பாலும் சரி, பாவையும் சரி, கெட்டு விட்டால் பயனில்லை. என்று சமுதாயத் தத்துவம் சமையற்காரன் மூலம் அவள் காதுகளில் ஒலிக்கிறது: உடனே, அவளது கண்கள் திறக்கின்றன! எளிய முறையிலே அவளைச் சாகடித்து விட்டீர்கள்! எழுத்தாளர்களின் தலைவலியை மிக எளிதில் போக்கவல்லது ஆயிற்றே ஆழி? செத்துத்தான் சமூகத்தின் அனுதாபத்தைப் பெற வேண்டுமானால், அந்தப் பாழும் அனுதாபம் எனக்கு வேண்டவே வேண்டாம்! என்று வீரம் பொழிந்த அகல்யவை நீங்கள் ஏன் அவ்வளவு துரிதப்பட்டுக் கொன்று போட்டீர்கள்? உங்களுக்குக்கூட அவள்பால் இரக்கம் பிறக்கவில்லையா? நான் உன்னைக் காதலிக்காமல் கொல்லுவதை விட காதலித்தே கொன்று விடலாமென்று நினைக்கிறேன். என்று உங்கள் கனகலிங்கத்தைப் பேச வைத்திர்களே. அதன் நிமித்தம்தான் அவளுக்கு வாழ்விலிருந்து விடை கொடுத்தீர்களா?