பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 143 அநத விடையிலே, சமூகப் பிரச்சனைக்கு விடை கிடைக்கவில்லை; விடைதான் கிடைத்திருக்கிறது. என் ஆழ்ந்த அனுதாபங்கள் அகல்யாவுக்கு உரியனவாகுக! ஏன், தெரியுமா? அவள் செத்துப் போனாளே என்பதற்காகவா? - அன்று, அருமை மிகுந்த இந்தத் தமிழ் மண்ணில் அவள் பிறந்தாளே என்பதற்காக! ஒரு காலத்தில் சொர்க்கத்திற்கு இருந்த மதிப்பு காதலுக்கு இருக்கிறது. இரண்டும் கற்பனையே என்றாலும், காதலைக் கைவிட நம்மால் முடிவதில்லை! அமிர்தம் என்ற என்னுடைய சிறுகதைத் தொகுப்பிற்குத் தாங்கள் அருளிய முன்னுரையின் இடையிலே தலைகாட்டும் வாசகம் இது. காதலை எழிற் கனவுக்கு நான் அடிக்கடி ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கம். நம் இருவருடைய காதல் விளக்கங்களும் ஏறக்குறைய ஒரே குரலில்தான் ஒலிகாட்ட, ஒலி கூட்ட முடியும். சொர்க்கத்திற்கு கனவுக்கும் நடுவில் அகப்பட்ட அகல்யா, இந்திரனிடம் அகப்பட்டு ஏமாந்து, அப்பால், கனகலிங்கத்தினிடம் அகப்பட்டு அனுதாபப் பொருளாகிறான்! இந்த அனுதாபமே கதைக்குக் கருப்பிண்டம் என்பது என் எண்னம். இந்த அனுதாபம்தான் கதையின் பிரதானப் பாத்திரம்! அனுதாபத்தின் இருவேறு கிளைகள் தாம் அகல்யாவும் கனகலிங்கமும்! அகல்யாவின் துயரக் கதையைக் கேட்டு வருந்தும் கனக லிங்கம், அவள் பேரில் அனுதாபம் கொண்டு, அதன் விளைபயனாக நம்முடைய அனுதாபத்தையும் சுவீகரித்துக் கொள்ள முயன்றான். அவன், உத்தமன்! கற்பனை மெரு கிழந்த தன் துயரப் பெருங்கதையைச் சொன்ன அகல்யாவுக்கு வாழ ஆசை துடிக்கிறது. எனவே. கனகலிங்கத்தையே தன்னுடைய உயிர்ப்பிடிப்பாகப் பற்றக் கனவு காண்கிறாள்; அதுவே சொர்க்க மெனவும் மகிழ்கிறாள். சமுதாயத்தின் அனுதாபத்தை அடைய வேண்டுமென்பதற்காகச் சாக விரும்பாத