பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 145 இவ்விரு வரையும் மேலே அனுப்பி விட்டதன் மூலம், உங்களுடைய அனுதாபத்துக்கு இவர்கள் இரு வரும் இலக்காகவில்லையென்று ஏன் கருதமுடியாது? - நான் அப்படித்தான் கருதுகிறேன்!. மனித மனம் சலனம் நிறைந்தது; சபலம் நிரம்பியது. காதல் என்னும் போர்வை மூலமாகத் திரிந்த அகல்யாகவுக்குக் காமமே மிஞ்சியிருந்திருக்க வேண்டும்! கெட்டவள் என்று தெரிந்தும், தன் இடத்தில் தங்கப் புகலளித்து, பிறகு, நெஞ்சிலும் இடம் கொடுக்க எண்ணியிருந்த கனகலிங்கத்தின் எதிர்பாராத மரணத்தின் சூழ்ச்சியைப் பற்றி ஏற்கெனவே ஊகித்ததாக எண்ணும் அவள் முன்கூட்டியே அந்த விபத்தைத் தடுத்திருக்கக் கூடுமே? நான் அப்பொழுதே நினைத்தேன்; நீங்கள் தான் அந்தக் கொலைகாரனை அனுப்பியிருப்பீர்களென்று! நீங்கள் நாசமாய்ப் போக! என்று நாகரிகமான சாபம் கொடுத்ததுடன் அவள் கனகலிங்கத்தின் உயிரின் மீதும் உள்ளத்தின் மேலும் வைத்த காதலின் கதை சுபம் பெற்றுவிடுகிறதா? இதயம் பெற்றிருந்தவனை இழந்த கோலம் மாறுவதற்குள்ளாகவே, அவள் தசரத குமாரனைப் பின்தொடர வேண்டியவள் ஆகிறாளே? அகல்யாவிடம் நமக்குக் கனிவும் பச்சாதாபம், பரிவு, பாசம் போன்ற சகல உணர்ச்சிகளும் இந்த இடத்தில்தான் நம்மைவிட்டுப் பிரிகின்றன. பிரிந்து, அகல்யாவின் கழலடிகளில் தஞ்சம் புகுகின்றனவா? அன்று! கடலில் குதித்துத் தற்கொலை செய்து கொள்ளுகின்றன! வாழ்வுக்கு உதவி கேட்ட இந்தக் காதல் பைத்தியம் பெண்களின் பெயரால் வற்புறுத்தப்படும் கற்பின் பெயரால் சாக விரும்பாதவளென நீங்கள் வரம்பு வகுத்து, இறுதியில் தெய்வத்துக்குப் பதிலாக நீங்களே சூத்திரதாரியாக ஆக்ட் பண்ணி அவளைக் கொன்றிருக்கிறீர்கள்! பாவம், அகல்யா...! பாவமே அகல்யா!... ‘எல்லாவற்றையும் வேடிக்கையாகக் கருதுவதால்தான் என்னால் உயிர்வாழ முடிகிறது’ என்கிறான் கனக லிங்கம். காதலினால் சாண் வயிற்றைத் திருப்திப்படுத்த முடியாதென்று இந்திரனால் பாடம் படித்துக்