பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 விந்தன் இலக்கியத் தடம் கொடுக்கப்பட்ட அகல்யாவின் கதையைக் கேட்ட பிறகே, அவன் இவ்வாறு சொல்கிறான். நெருங்கி வந்தவளிடமிருந்து விலகும் கனகலிங்கம், வேண்டாம்! பசி தீர்ந்துவிட்டால், நானும் இந்திரனைப்போல் ஒட்டம் பிடித்தாலும் பிடித்துவிடுவேன்' என்றும் அறிவிக்கிறான். அவள் ஒட்டி ஒட்டி வரும் போது, அவனோ எட்டி எட்டிப் போகிறான். சிறு சலசலப்பு. ஐயோ, பாவம்! உலகம் தெரியாத அபலை அவள்! காதல் உண்மையென்று நம்பினாள். அந்தக் காதலுக்காகத் தன்னை ஒருவனுக்கு அர்ப்பணித்தாள். அவன் அவளைக் கைவிட்டான். அதற்காக அவள் செத்துப்போக விரும்பவில்லை, வாழ விரும்புகிறாள். ஆண்களுக்கு மட்டும் அந்த உரிமையை அளிக்கும் சமூகம் பெண்களுக்கு மட்டும் அந்த உரிமையை அளிக்க மறுக்கிறது! இது அக்கிரமந்தானே? என்ற கணநேர மெளனச் சிந்தனை அவனது தயாள சிந்தையின் கதவுகளைத் திறந்துவிடுகிறது. அகல்யா, அகல்யா! நான் உன்னுடைய மனத்தைப் புண்படுத்திவிட்டேனா, என்ன? சொல்லு: அகல்யா, சொல்லு! என்று அவன் குழைகிறான். இந்நிலை, சலனத்தின் விளைவா? அன்பு பண்பின் பணியா? சமுதாய வீதியிலே, தடம் புரண்டவள் அகல்யா! ஆனாலும், அவள் இதயத்தை அடியோடு இழந்துவிடவில்லை. ‘ஆம்; அன்று நீங்கள்தான் என்னைக் காதலித்துக் கொள்வதாகச் சொன்னிர்கள். ஆனால் இன்றே, நான் உங்களைக் காதலித்துக் கொன்றுவிட்டேன்! என்று அவள் தன்னுள் சொல்லிக் கொள்ளும்போது, அவள் என் இதயத்தைத் தொட்டுவிட்டாள். ஆனால்...? "ஐயோ! ஆண்களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு இன்னொரு நீதியா? இந்த அக்கிரமத்துக்கு இன்னும் என்னைப்போல் எத்தனைப் பெண்கள் பலியாக வேண்டும்? உங்களுடைய இதயத்தில் ஈரம் இல்லையா? அந்த ஈரமற்ற இதயத்தை