பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 விந்தன் இலக்கியத் தடம் ‘அப்படியானால் நீங்கள் செத்துப் போனவனிடமிருந்தா காகிதம் வாங்குகிறீர்கள்? என்று ஆசிரியர் எரிச்சலுடன் கேட்டார். ' கொடுக்கத் தயாராகயிருந்தால் வாங்கத் தயாராயிருக்கிறோம். - என்றான் கனகலிங்கம் அமைதியாக. 'ரொம்ப சரி, உங்களுக்கு என்னுடைய நூல் கிடைக்காது. அஸ்திதான் கிடைக்கும்? - என்று சொல்லிவிட்டு எழுத்தாளர் துப்பாக்கியிலிருந்து கிளம்பிய ரவையைப் போலக் கிளம்பினார். முடிந்தால் அதையும் பணமாக்குவோம்! என்றான் கனகலிங்கம். அப்பொழுது வந்த கடை முதலாளி பரமசிவம் சொல்கிறார். ‘ஏண்டா, உனக்கு நான் எத்தனை தரம் சொல்வது? நம்முடைய பாலிஸியை இப்படியா வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பது....” ‘எங்கேயாவது கெட்ட பால் நல்ல பாலாகுமா ஸார்? எடுத்துச் சாக்கடையில் ஊற்ற வேண்டியது தானே! - என்கிறான் தசரதகுமரனது சமையற்காரன். இதைக் கேட்ட தசரதகுமாரன், அகல்யாவும் கெட்டுப் போனவள்தானே என்று எண்ணி, அவளை வெளியே விட்டுக் கதவைச் சாத்திக் கொள்கிறான். இதைப் புரிந்து கொண்ட அகல்யா, அட கடவுளே! பாலும் பாவையும் ஒன்றென்று எண்ணியா என்னை நீ படைத்தாய்? என்று நெட்டுயிர்த்தாள். நல்லவர்கள் வாழ்வதில்லை நானிலத்தின் தீர்ப்பு என்று கதையை முடிக்கிறார் விந்தன். நம் கண்களிலிருந்து கண்ணிர் வடிகிறது. உண்மைக் காதலின் தத்துவத்தை விளக்குவது பாலும் பாவையும். அது கடுகு உள்ளங்கொண்டவர்களைச் சாடுகிறது. குத்தித் தைத்து இரணமாக்கும் ஈட்டி முனை அது. ஆம் ஜெர்மன் கவி சொன்னதுாேல் பாலும் பாவையும் விந்தனது இரத்தத்தால் ஆன நூல்தான். ஆனந்தவிகடன் - 1961