பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தனின் பசிகோவிந்தம் - விடுதலை கி. வீரமணி அந்தக் காலத்து முடியாட்சி இருந்தால் அது வேறு விஷயம். மன்னனை வசப்படுத்திக் கொண்டு, வர்ணாசிரம கர்மத்தை தர்மம் என்று சொல்லிக் கொண்டு, படித்தால் நாக்கை அறுத்து விடுவேன்; மூக்கை நறுக்கி விடுவேன்' என்று உன்னைப் பயமுறுத்தலாம். இப்போது அப்படி பயமுறுத்த முடியாது. அதனால்தான் சொல்வதைக் கொஞ்சம் நாகுக்காகச் சொல்லியிருக்கிறார், ஆசான்! அவருடைய பல்லக்கைச் சுமக்கும் உனக்கு ஏன் படிப்பு? அட மூடா: படிக்காதே; படித்தால் அவருடைய பல்லக்கைச் சுமக்க நீ மறுத்துவிடுவாய்! எதையும் பகுத்தறிந்து பேச ஆரம்பித்து விடுவாய்! உனக்காக சாக வழி காட்டும் ஆசான் இல்லை. சொர்க்கத்துக்குச் செல்ல வழிகாட்டும் ஆசான் நடக்க முடியுமா? என்னை ஆக்கும் பகவான், என்னை அழிக்கும் பகவான் உங்களைக் காப்பதுபோல் என்னையும் ஏன் காக்கவில்லை? என்று நீ கேட்டால் அவரால் பதில் சொல்ல முடியுமா? - இப்படி ஆத்திக புரியில் அறிவுக்கனை என்ற குண்டுகளைப் போட்டார் புரட்சி எழுத்தாளர் நண்பர் விந்தன் அவர்கள்! பசி கோவிந்தம் என்ற அவரது நூல் பஜகோவிந்தப் பண்டிதர்களின் பராக்குகளைச் சுக்கல் சுக்கலாக உடைத்தெறிந்த அறிவுக் கருவியாகும்!