பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 விந்தன் இலக்கியத் தடம் கதா பாத்திரங்கள் வஞ்சிக்கப்படும் போதும் - ஏமாற்றப்படும் போதும் - அவர்கள் குமுறுவதில்லை. பாமரத் தன்மையோடு அதனை ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள். அங்கீகரித்துக் கொள்கிறார்கள்; தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்கிற எண்ணமே இல்லாது. அதோடு கூட வஞ்சித்தலை புகழ்ந்துகொண்டேகூட இருக்கிறார்கள். ஒரு கதை. பொன்னையா, அப்பாவித்தனம் கொண்ட பொன்னையாவை ஜில்லா போர்டு தலைவர் தர்மலிங்கம் பணம் கொடுத்து ஏமாற்றி விடுகிறார். அந்தப் பரிதாபத்திற்கு 2.ரியவனோ. அதனைப் புரிந்து கொள்ளாமல் மகாராஜவாகப் புகழ்ந்து கொண்டாடுகிறான். பொன்னையா தாழ்ந்த ஜாதிக்காரன். அவன் குடிசையை வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது; தெரு வில் குடியிருக்கிறான். ஒருநாள் அவனுக்கு ஒரு யோசனை தோன்றுகிறது; ஒண்டுக் குடுத்தனம் இருந்தால் என்னவென்று, ஜில்லா போர்டு தலைவர் - எல்லோரும் ஒரு குலம் என்று பேசுகிற தர்மலிங்கம், தனக்கு வீடு கொடுக்கலாம் என்ற நம்பிக்கையோடு சென்று வீடு கேட்கிறான். அவரோ நாளை வா என்கிறார். இவனும் மறுநாள் செல்கிறான். ‘ஏண்டா, பொன்னையா எத்தனை நாளைக்கு நீ என் வீட்டுத் திண்ணையில் பொங்கித் தின்று கொண்டிருக்க முடியும்? இந்தா, இந்த ஐம்பது ரூபாயைக் கொண்டு போய் உனக்கென்று ஒரு வீட்டைக் கட்டிக் கொள்:” பொன்னையா பணத்தை வாங்கிக்கொண்டு போய் தன் மனைவி சின்னியிடம் கொடுத்தான். "ஐயோ சாமி, இத்தனை பணம் உனக்கு ஏது? என்று திடுக்கிட்டுக் கேட்டாள் சின்னி. 'ஐயா தான் கொடுத்தாரு என்றான் பொன்னையா. 'ம வராஜர் இந்த ஏழைகளுக்கு இவ்வளவு பணம் கொடுத்தாரே, அவரு மனுசர் இல்ல; தெய்வம்'