பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 விந்தன் இலககியத் தடம் கலை என்பது பிரச்சாரத்தில் அடிபட்டுப் போகிறது. அரசியல் பிரச்சாரந்தான் இப்படி அடிபட்டுப் போகும் என்பதல்ல; எல்லா வகையான பிரச்சாரமும் இப்படியே அடிபட்டுப் போகிறது. கலைஞன் குரல் அழுநதி அடக்கமாக ஒலிக்கையில் பிரச்சாரத்திற்கு வலுவும் சாசுவதத்தன்மையும் கிடைக்கிறது. சுந்தர ராமசாமியின் உழவு மாடும் கோயில் காளைக்கும் கிடைத்திருப்பது போல - இதை விட்டுக் கலைஞன் குரல் தூக்கலாகத் தூக்கலாக கலை என்பது நழுவி விடுகிறது; பிரசாரம் தங்க, விந்தன் கதைகள் சமபவக் குவியல் அல்ல; சம்பவங்ளை மேலும் கீழுமாக மாற்றி மறுபடியும் எழுதும் கதைகள் அல்ல. ஐடியா கதைகள் - கருத்துக் கதைகள்; திரும்பத் திரும்ப வெவ்வேறு மனிதர்களின் மீது ஏற்றி எழுதக் கூடிய கதைகள். கருத்தை ஒரே நோக்கில் - நேராக அலங்காரமின்றி சொல்லுபவை. விந்தன், ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் பல தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்களைவிட மிகவும் குறிப்பிடத் தக்கவராகவே இருக்கிறார். கண்ணதாசன - 1970 {}