பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(23) முல்லைக்கொடியாள் சாவி இன்று எத்தனையோ புதுப்புது எழுத்தாளர்கள் தோன்றி எவ்வளவோ விதமான சிறுகதைகளையும் நவீனங்களையும் சிருஷ்டி செய்கிறார்கள். ஆனாலும் அவைகள் எல்லாம் உண்மை இலக்கியங்களா? உண்மையான இலக்கியங்கள் தோன்ற வேணடுமானால் அதற்கு வாழ்க்கையில் உண்மையான அனுபவமும் வேணடும். உதாரணமாக, பாட்டாளிகளின் கவி. டங்களைக் கதைகளில் புகுத்தவும், அந்தக் கவி, டங்களைக் கதையாகச் சொலலும்பேது கதையின் லட்சணம் கெடாமலும் கையாளுவதற்கு மிகுந்த திறமை வேணடும் ஏர்பிடித்து நிலத்தை உழும் குடியனவனைப் பற்றியும், இயந்திரத்துடன் இயந்திரமாக வேலை செய்யும் ஆலைத் தொழிலாளியைப் பற்றியும், நெற்றி வியர்வை நிலத்தில் சொட்ட பாரம் இழுக்கும் வண்டிக்காரனைப் பற்றியும் எவ்வளவோ எழுத்தாளர்கள் கதை எழுதுகிறார்கள். ஆனாலும் அவைகளில் பாட்டாளிகளின - ஏழை மக்களின் - கஷ்ட நஷ்டங்கள் உண்மையாகக் கூறபபட்டுள்ளனவா? பாட்டாளிகளின் குறைகளை உள்ளது உளளபடி எழுத்தின் மூலம படம் பிடித்துக் காண்பிக்கும் எழுத்தாளர் யாராவது இருககிறாாகளா என்றால பேஷாக இருக்கிறார். அவர்தான் பூரீ வி கோவிந்தன் எனப்படும் விந்தன் என்று தயங்காமல் கூறலாம் தொழிலாளர்களின வாழக்கையில் அடங்கியுள்ள அரிய விஷயங்களைக் கொண்டு எழுதப்பட்ட அருமையான புத்தகம்தான் முல்லைக் கொடியாள் என்னும் சிறுகதைத் தொகுதி.