பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 விந்தனை வணங்குகிறேன்! - டி.கே. சீனிவாசன் வலிவை வளர்த்துக் ாெகள்ளும் வழிவகைகளை அமைத்துக் கொள்ளுபவர்கள் மட்டுமே வாழுகிறார்கள்; திறமைகளை மட்டும் பெருக்கிக் கொள்ளுபவர்கள் தேய்ந்து போகிறார்கள். ஆதாயத்துக்காக ஆட்களைத் தேடுவோர் ஆற்றலைப் போற்ற மாட்டார்கள். அவர்களுக்கென்று எவருமே இல்லாததால் எத்தனையோ எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் அடிக்கடி நினைவுப்படுத்தப்பட்டும் நிலைபெறாமல் போய்விட்டார்கள். மறைந்து போன நாட்களோடு இவர்களையும் இணைத்து மறந்துவிடுகின்றனர் மக்கள். பொன்னைக் குவித்துக் கொள்ளுபவர்களால் புகழை வளர்த்துக் கொள்ள முடிகிறது; மற்றவர்கள் மக்கிப் போகிறார்கள். இலக்கிய உலகில், உருவாக்குபவனை விட உரை சொல்லுபவன் உயர்வாக மதிக்கப்படுகிறான். ஊரே அவனைச் சுற்றிக் கூடுகிறது. எவரெவரோ எப்போதெப்போதோ எழுதிப் போட்டவை அனைத்தையும் தம மூளையில் திணித்துக் கொண்டு படிப்போரின் தேவைக்கேற்ப எழுதுவோரும், கேட்போரின் வேட்கைகேற்பப் பேசுவோரும் - இன்றையத் தமிழ் இலக்கியத் தாரகைகள்! இரவு பகலாக மூளையைக் குழப்பிக் கொண்டு எண்ணங்களுக்கு எழுத்துருக் கொடுத்தவன் எங்கேயோ ஒரு மூலையில் தள்ளப்பட்டிருக்கிறான். அடுத்தவன் உழைப்பை எடுத்துக் கொண்டு அதை வாணிபம் செய்பவன் வளமோடு வாழுகிறான் விதைத்து வளர்த்த உழவன் ஒடுங்கி வாழுகிறான்!