பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 173 விளைச்சலை விற்றுப் பிழைக்கும் வணிகன் வளமையைக் குவித்துக் கொள்ளுகிறான. பட்டுப் போய் விடுவார்களோ என்று சில எழுத்தாளர்களைப் பற்றி நாம் கவலைப்படும்போது, மேலே காணும் சிந்தனைகள் நம்மை எட்டிப் பார்க்கின்றன. படிப்பதற்காக நேரத்தை ஒதுக்கிய காலம் ஒன்றிருந்தது இப்போது அப்படி இல்லை; நேரத்தைப் போக்குவதற்காக நூல்கள் தேடப்படுகின்றன. அந்தந்தக் காலத்துக்கு ஏற்றபடிதான் இலக்கியங்கள் உருவாக்கப்படுகின்றன பழைய புத்தகக்காரனிடம் கால்பங்கு விலையாவது பெற்றுவிடலாம் எனற நம்பிக்கையூட்டும் புத்தகங்கள் சில; எடைக்குப் போட்டாலும் ஏதாவது கிடைக்கும் என்று சமாதானப்படுத்திக் கொள்ள உதவுபவை சில. இந்த நாட்டில் இலக்கியம் இப்படித்தான் வளருகிறது, இந்தக் காலத்தில், அறிவு எனனும் அலமாரியில் அடுக்கி வைக்கும் தகுதி பெற்றவை ஒரு சில படித்து முடித்த பிறகு மறுபடியும் புரட்டிப் படிக்கத் தூண்டும் பத்து வரிகளாவது உள்ள புத்தகங்கள் சில இப்படிப்பட்ட நூலகளை மட்டுமே உருவாக்குவோர் ஒரு காலத்தில் வாழ்நத நாடுதான நம் தமிழ்நாடு அப்போது உருவாகி வாழ்ந்த எழுத்தாளர் தான் திரு விந்தன். அவரை நான பார்த்ததில்லை; அவருடைய எழுததுக்களை ஓரளவு படித்திருக்கிறேன இயல்பான நிகழ்ச்சிகளை இலக்கியமாக்கிக் காட்டுவதில் வல்லவர் அவர்; நமக்கே அவை நிகழ்ந்திருக்கு ம; அவதிப் பட்டிருப்போம்; அவருடைய எழுத்துகளால் அவற்றைப் படிக்கும் போது நம்மையறியாமலே அவற்றை அனுபவிக்கிறோம். மனிதனுடைய செயல்கள்தாம் செக்கு மாடுகள் போல் இயங்கு கின்றனவே தவிர அவனுடைய சிந்தனைகள் மாறிக் கொண்டுதான் இருக்கினறன. அவனைக் குறுக்கிடும் ஒவவொன்றும்