பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 விந்தன் இலக்கியத் தடம் அவன் எண்ணங்களை அலைக்கழிக்கத்தான் செய்கிறது. தொடர்ச்சி இல்லாமல் துண்டு துண்டாக அவை சிதைந்து போவதால் அவற்றால அவனிடம் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்த முடிவதில்லை. இடைப்படுகிற மனிதர்களும் சூழ்நிலைகளுங்கூட எவரிடமும் மாறுதல்களை ஏற்படுத்திவிட முடிகிறது என்றால் எழுதத் தெரிந்தவர்கள் பேனாக்களால் எவ்வளவோ மாற்றங்களை ஏற்படுத்திவிடலாம். தனிப்பட்ட ஏற்றங்களுக்காக எழுதுவோர் பலர், சமுதாய மாற்றங்களுக்காக எழுதுவோர் சிலர் - இல்லை ஒருசிலர். எழுதுவோர் அனைவருக்கும் ஒரே குறிக்கோள்- ஒத்த குறிக்கோள் - இருந்தால் உலகம் எவ்வளவோ உயர்ந்திருக்கும் வாழ எழுதுவோரின் எண்ணிக்கை வளருகிறது - வாழ வைக்க எழுதுவோர் குறைகின்றனர் - கொஞ்சங் கொஞ்சமாக மறைகின்றனர். மறைபவர்களைவிட மறைக்கப்படுவோர்தாம் அதிகம். அப்படிப்பட்டவர்கள் பட்டியலில் இருப்பவர்தான் திரு.விந்தன். தம்மை மறந்து அடுத்தவர்கள் வாழ்வில் தம்மை இழந்தோர் எப்போதும் என் வணக்கத்துக்கு உரியவர்கள். திரு. விந்தனை நான் வணங்குகிறேன்! 1982