பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 177 பண்புக்கும் ஒழுக்கத்துக்கும் கொடுக்க வேண்டிய மதிப்பே முக்கியமானது என்பதை அனைவரும் அறிவார்கள், சுவாமி விவேகானந்தா, மகாத்மா காந்தி போன்றவர்கள் எளிய வாழ்வையும் தியாக உள்ளத்தையும் வற்புறுததிக் கூறியிருக்கிறார்கள். அதை அலட்சியப் படுத்திவிட்டு, எப்படியும் எல்லாவற்றுக்கும் பணம்தான் முக்கியம் என்று வந்துவிட்டால் அடிப்படையான மனிதத் தன்மை, மனிதாபிமானம் ஆகியவை போய்விடும். அப்புறம் பாரதியார் பாடியபடி கண் இரண்டையும் விற்றுச் சித்திரம் வாங்குகிற கதைதான். எனவே, இலக்கியப் படைப்பாளி பொறுப்பு வாய்ந்தவன். அவன் பணத்துக்கும் பதவிக்கும் அல்லது பகட்டுக்கும் பின்னால் பல்லைக் காட்டிக் கொண்டும் வாலையாட்டிக் கொண்டும் ஒடுகிற பிராணி அல்ல. அவையெல்லாம் அவனுக்குப் பின்னால் ஓடி வர வேண்டும். எதிர்கால வளத்தைக் கண்டு அவற்றைச் சமுதாயத்துக்கு எடுத்துககாட்டி அழைத்துப் போகும் சமுதாயச் சிற்பி அவன். மற்றப் பண்புகளையெல்லாம் விட எப்படியும் பணம் பண்ணிவிடுவதுதான் வாழ்வின் உயர் சாதனை எனறு கருதுகிற கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவன் அல்ல அவன் இன்று பச்சைப் படுமோசமான விபசாரிகூட பணத்தின் காரணமாகச் சமூகத்தில் எல்லா விதமான தகுதிகளும் படைத்தவள் மாதிரி சபைக்கு முன்னே வந்துவிடுகிறாள்; சம்சாரிகள் சங்கத்துக்கு விளக்கேற்றி வைக்கவும், தர்ம விளக்கம் செய்யவும் வந்து விடுகிறாள். கள்ளக் கடத்தல்காரர்கள் ஆட்சியில் இருப்பவர்களையே பணத்தைக் கொண்டு ஆட்டிப் படைக்கிறார்கள். சமுதாய விரோதமான காரியங்களில் ஈடுபட்டுப் பணம் பண்ணத தெரிந்த கருப்புச் சந்தை வியாபாரிகள், கள்ளச் சாராயச் சீமான்கள், சுரண்டல் கலையில் வல்லவர்களான தொழிலதிபர்கள், கீழ்த்தர உணர்ச்சிகளைக் கிளறி விட்டு அதைக் காசாக்கிக் கொண்டு வேஷம் போடுகிற பத்திரிகை முதலைகள், படத்தொழில் திமிங்கலங்கள் போன்றவர்கள் ஆட்டைக் கடித்து மாட்டைக்கடித்து ஆளையே கடித்த விழுங்கும் அரசியல் சூதாடிகள்