பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(28) விந்தனின் ஒரே உரிமை - மு. பரமசிவம் நீண்ட நெடுங்காலமாகச் சமூகத்தில் நிலவிவரும் சாதிப்பாகுபாடு, தீண்டாமை போன்ற கொடுமைகளுக்கு இரையாகி அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் ஏழை எளிய மக்கள், சுதந்திரமாகவும் சுயமரியாதையோடும் வாழ்வதற்கு ஏற்றத்தாழ்வற்ற பொருளாதாரச் சமத்துவ, சமூக அமைப்பே ஏற்புடையது என்கிற எண்ணமுடைய விந்தன், தமது படைப்புகள் அனைத்திலும் அக்கருத்தைப் பரவலாக வெளிப்படுத்தியுள்ளார். சிறப்பாக ஒரே உரிமை என்கிற சிறுகதையில் தீண்டாமை என்னும் தீயினுக்கு இலக்காக அக்னிப் பிரவேசம் செய்ய ஆற்றல் அற்று, உயிர் விடவும் உரிமையின்றித் தீண்டாமை என்னும் தீயில் தினம் தினம் வெந்து வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவனை அறிமுகப்படுத்தி வாசகனின் அனுதாபத்தைத் துண்டுகிறார். ஒரு கிராமத்தில் எச்சில் சோற்றுக்கு நாயுடன் போராடிக் கொண்டிருக்கும் சோலையப்பன் பேரில் அனுதாபம் கொண்ட ஒரு மனிதாபிமானி, அவனுடைய வாழ்க்கையைக் கேட்டறிந்து வருத்தமடைகிறார். மீண்டும் அவன் வயிற்றுச் சோற்றுக்கு நாயுடன் போராடி மனிதன் என்னும் உறவிற்கு இழுக்குத் தேடாவண்ணம் அவனுக்கு வேலை வாயப்பை உண்டாக்கித் தருவதாக வாக்களிக்கிறார். காந்தியத்தில் நம்பிக்கை கொண்ட அந்த மனிதாபிமானி, சோலையப்பனுக்கு வாக்களித்தபடி கிராமத்துக் கடைவீதியில் சிறிய