பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 183 'எனக்கு இருப்பது ஒரே உரிமைதானுங்க. தற்கொலை செய்து கொள்ளும் உரிமைதானுங்க அது என்றான் சோலையப்பன் அநத ஒரே உரிமை கூட அவனைப் போன்ற அப்பாவிகளுக்கு இல்லை என்னும் விஷயம் அவனுக்கு எப்படித் தெரியும்? - என்று அவர் வாய் முணுமுணுத்தது: கண்களில் நீர் சுரந்தது தீண்டாமை எவ்வளவு கொடுமையானது என்பதை நகரத்தில் வாழ்பவர்கள் நன்கு அறிந்திருக்க மாட்டார்கள், அப்படி அறிந்திருந்தாலும், நாகரிகம் என்னும் பெயரால் அதை வெளிப்படுத்தமாட்டார்கள். ஏனெனில் அசல் எது, நகல் எது என்று ஆராய்ந்து பார்க்காமல் எதையும் முற்போக்கு என்கிற போர்வையில் மூடி மறைப்பதே நகரத்தில் வாழும் மக்களின் நற்பண்பு ஆகும்! படித்தவர்கள் பனக்காரர்களுக்குத் துணையாக இருபபதும், பணக்காரர்கள் படித்தவர்களுக்குப் பாதுகாப்பளிப்பதும் பட்டன நாகரிகமாகும் இவர்களுக்கிடையே அடக்கி ஒடுக்கப்படுபவர்கள் ஏழை எளியவர்களே ஆவார்கள்! அதனால்தான் 'இந்தியாவின் உயிர் கிராமத்தில் இருக்கிறது" என்றார் காந்தியடிகள் அவரின் கருத்தை அடியொட்டியே விந்தனும் தம் இலட்சியத்தைப் பரப்புவதற்கு ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்தார். முடிவு? கிராமத்தில் காந்தியம் தோற்றதுபோலவே விநதனின் இலட்சியமும் தோற்றது! அரிஜன் என்பவர்கள் கடவுளின் குழந்தைகள் என்று பரவலாகப் பேசப்பட்ட போதிலும் அந்தக் குழநதைகள் சாதாரண மனிதனாகக் கூட மதிக்கப்படாத காலத்தில், கிராமத்து மக்களால் தீண்டத தகாதவன் என்று ஒதுக்கப்பட்ட சோலையப்பன என்கிற தொழிலாளியின் பேரில் ஒரு மனிதாபிமான அன்பு காட்டி ஆதரித்தது ஏன்? "நீரோடை நிலங்கிழிக்க நெடுமரங்கள் நிறைந்து பெருங்காடாக்கப் பாம்புக்கூட்டம் போராடும் பாழ்நிலத்தை அந்த நாளிற் புதுக்கியவர் யார் அழகு நகருண்டாக்கி? என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடினாரே அந்த வர்க்கத்தை அடையாளம் காட்டுவதற்கு; ஆனாலும் அந்த மனிதனின் ஆசை நிராசையாகி இலட்சியம் தோற்றுவிட்டது!