பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 விந்தன் இலக்கியத் தடம் "இருட்டறையில் உள்ளதா உலகம் - சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே.” என்று இடி முழக்கம் போல் முழங்கினார் பாவேந்தர். இத்தகைய உணர்வுகளை உள்ளடக்கியதுதான் விந்தனின் ஒரே உரிமை என்கிற சிறுகதை, விந்தன் எதையும் கற்பனையாக எழுதவில்லை; நாட்டு நடப்புகளையே எழுதியுள்ளார் என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது ஒரே உரிமை. விந்தன் கதைகள் அனைத்தும் பத்திரிகைகளில் வெளிவந்த கதைகளே எனினும், படிப்பவர்கள் மனத்தில் சமூக உணர்வுகளைப் பதிய வைக்கக்கூடிய கதைகளாகும்! விந்தன் கதைகளைப் படித்துப் பேராசிரியர் கல்கி சொன்னார். மிகவும் அனுபவித்து சொன்னார். 'விந்தன் கதைகளைப் படிப்பதென்றாலே எனக்கு எப்போதும் மனதிலே பயம் உண்டாகும்; படித்தால் மனதிலே என்னென்ன விதமான சங்கடங்கள் உண்டாகுமோ, எப்படிப்பட்ட வேதனைகளுக்கு ஆளாக நேருமோ என்றுதான் பயம்! "அவருடைய கதாபாத்திரங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கெல்லாம் நாம்தான் காரணமோ என்று எண்ணி எண்ணித் தூக்கமில்லாமல் தவிக்க நேரும்.’ 'அவ்விதம் வாசகர்களின் மன அமைதியைக் குலைக்கக் கூடிய இயல்பு வாய்ந்த கதைகள்தான் உண்மையான இலக்கியம் எனறு தற்காலத்து இலக்கிய புருஷர்களும் இலக்கிய மேதாவிகளும் சொல்கிறர்கள் 'இது உண்மையானால் விந்தனுடைய சிறுகதைகள் உண்மையான இலக்கியம் என்பதில் சிறிதும் ஐயமில்லை! விந்தனின் சிறுகதைகளின் சிறப்புக்குக் கல்கியின் பாராட்டே சிகரமாகும்! தமிழ்ச் சிறுகதை நேற்றும இன்றும - 1992 器