பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் ஒரு புதிர் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் கலைகளிலே ஒரு கலை, இலக்கியம், அதுவே கலைகளிலே சிறந்தது. கவின்கலைகள் என்ற தலை சிறந்த கலைகளிலேகூட அது முதன்மையானது. ஏனெனில் துளிகையை மையில் குழைத்துத் திரையில் தீட்டுகிறான் ஓவியன்; விரல்களை நரம்பில் தடவிப் பண் எழுப்புகிறான் இசைக் கலைஞன்; இலக்கியக் கலைஞனாகிய எழுத்தாளனோ, தன் உள்ளத்தின் உணர்ச்சிகளையே, கற்பனைகளையே தூரிகையாக, விரல்களாகக் கொண்டவன். வாழ்நத மனித இனத்தின் பட்டறிவால் உருவாகியுள்ள மொழியே அவனுக்கு மை, நரம்புகள். அவன் எழுதும் திரையோ வெறும் தாள்கள், ஏடுகள் அல்ல; வாசகரின், ஆண் பெண்களாகிய வாழும் மனிதரின் உள்ளங்கள்! இலக்கியக் கலையின் தனிச் சிறப்புக்கு இன்னும் ஒரு காரணம் உண்டு. கலையின் இலக்கணம் முழுவதும் கைவரப் பெற்ற கலை இலக்கியம். கலை, இலக்கியம் ஆகிய இரண்டின் இலக்கணங்களில் ஒன்று அல்லது ஒரு கூறு கலை என்ற சொல்லில், கலிப்பு, களிப்பு என்ற அதன் வேர்ச் சொல்லில் அடங்கியுள்ளது. அது இன்பம், இன இனபம், இனவாழ்வுக்கு உகந்த இன்பம் தரவேண்டும். இந்தப் பண்பு இல்லாவிட்டால் அது அறிவேடு, நீதிநூல், சமய சாத்திரம், அறிவு நூல் ஆகலாம். தொழில் கலைத்தொழில்கூட ஆகலாம்; கலையோ, இலக்கியமோ ஆக மாட்டாது. கலை, இலக்கியம் ஆகியவற்றின் இலக்கணங்களில் மற்றொன்று அல்லது மற்றொரு கூறு இலக்கியம் என்ற சொல்லில்,