பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 விந்தன் இலக்கியத் தடம் ஏனெனில் கலை நுகர்வோர் விரும்பும் குறிக்கோள், நுகர்பவரை விரும்பி நுகர வைக்கும் குறிக்கோள் இன்பம் ஒன்று மட்டுமே. மற்ற இரண்டு குறிக்கோள்களும் - பொருட் குறிக்கோளும், அறக் குறிக்கோளும் பெற்றோர் நிலையில் உள்ள, ஆசிரியர், பாட்டி, மருத்துவர் நிலைகளில் உள்ள படைப்பெழுத்தாளன் தெரிந்தோ தெரியாமலோ, கருதியோ கருதாமலோ மேற்கொண்ட அல்லது இயல்பாகக் கொண்ட குறிக்கோள்கள் ஆகும். மிகச் சிறந்த கலைஞன், எழுத்தாளன் என்பவன் தெரிந்து, கருதி மேற்கொண்டவன் அல்லன். (அவனை நாம் அறிஞன், அறிவுக் கலைஞன் என்று கூறலாம்; கலைஞன் எழுத்தாளன் என்று கூற மாட்டோம்) தெரியாமல், கருதாமல் தன்னியல்பாக மேற்கொள்ளும் தாய்நிலையிலுள்ளவனையே நாம் தெய்வீகக் கலைஞன் என்று கூறுகிறோம். கலை, கலைக்காக என்று கூறுபவரில் பலர் இத்தெய்வக் கலை மரபில் வந்தவர்கள்; அவர்கள் தம்மை யறியாமல் கலை கலைக்காக என்று கூறும் கூற்றின் பின்னணிப் பொருள் இதுவே. எழுத்தாளர் விந்தன் ஒரு விந்தையான மனிதர். விந்தையான எழுத்தாளர். அவர் எழுத்துச் சுடும், ஆனால் சுவைக்கும், திடீர் திடீர் என அவர் "நறுக் நறுக் என்று குட்டுவார். ஆனால் முன் துவர்த்துப் பின் இனிக்கும் நெல்லிக்காய் போல, அது குட்டியவுடன் அதிர்ச்சி தந்து வலிக்கும்; ஆனால் தடவத்தடவ இனிக்கும். அவர் பொழுது போக்கு க்காக - தனது பொழுது போக்கு க்காகவோ வாசகரின் பொழுது போக்கு க்காகவோ எழுதுவதில்லை; ஒரு குறிக்கோளுடன்தான் எழுதுவார்! அவரது எழுத்தில் ஆடம்பரத்தையோ ஆரவாரத்தையோ காணமுடியாது! அழகுச்சொற்கள், அவசியமற்ற கவர்ச்சிகரமான வருணனைகள் இரு க்கமாட்டா. வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்றே பேசுவார், எழுதுவார். ஆனாலும் வாசிப்பவர்கள் வாசித்துக் கொண்டுதான் இருப்பார்கள். மந்திர வாதியைக் கண்டு அஞ்சியபடியே, விடாது பின்பற்றிச் செல்லும் சிறுவர்போல், மீண்டும் மீண்டும் அவர் படைப்பையே நாடுவார்கள்! எழுத்தாளர் உலகில் விந்தன் ஒரு புதிர்!