பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 15 எழுத்தாளர் விந்தனின் புகழ் சான்ற 'பாலும் பாவையும் என்ற புதினத்தை அறிமுகப்படுத்தும் இராணி முத்து, வெளியீட்டு வாசகங்களின் கருத்துப் பிழிவுகளே இவை! ஆனால் எழுத்தாளன் விந்தன் ஒரு புதிரா? திருவள்ளுவரின் திருக்குறள் ஒரு புதிரானால், எழுத்தாளர் விந்தனும் ஒரு புதிர்தான்! எழுத்தாளர்கள் பொதுவாக, தெய்வீக எழுத்தாளர்கள் சிறப்பாக அறம் அல்லது அறிவுரை என்ற கசப்புப் பண்டத்தை மறைத்து அல்லது பின் வைத்து, பொருள் அல்லது அறிவுரையைச் சிறிது மறைத்து, அல்லது அடுத்து வைத்து, இன்பம் அல்லது காதல் நாடகத்தைத்தானே முனைப்பாக முன்வைப்பார்கள்! இப்படி வைப்பதுதான் இக்காலத்துக்குச் சரி என்று கருதிப் பண்டாரகர் மு.வ. தம் வள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்ற ஆய்வேட்டில் அவ்வரிசையை மாற்றியே அமைத்துள்ளார். ஆயினும் பண்டாரகரும் நாமும் வாழும் இந்தக் காலத்தில்தான் திருவள்ளுவரின் இன்பநாடகம் படித்தறிந்தவர்களையோ, பொருளுணர்வுக் கருத்துக்களைப் படித்தறிந்தவர்களையோ விட, அவரது அறத்துப்பாலின் அறவுரைகளைப் படித்துப் பாராட்டுபவர் மிகுதி என்பதைப் பண்டாரகர் மு.வ எண்ணிப் பார்க்கவில்லை, நாமும் எண்ணிப் பார்ப்பதில்லை! இனிப்பும் துவர்ப்பும் உவட்டி, நாக்குச் செத்துப் போன நிலலயில் மக்கள் காரமும் கசப்புமே தேடுகிறார்கள். போலிகளையே மெய் என்று நம்பி, உண்மையான மெய்யை, அதாவது வாய்மையைப் புறக்கணித்துப் பொய் என்று ஒதுக்கும் நம் பகட்டு நாகரிக உலகுக்கு ஒரு வள்ளுவர், ஒரு தந்தை பெரியார், ஒரு விந்தன் வந்து, மெய்ம்மை பொய்ம்மைகளை, நன்மை தீமைகளை, இன்ப துன்பங்களைத் தலைகீழாகத் திருப்பி வைத்துக் காட்டி, அந்த அதிர்ச்சியின் மூலமே உண்மையான மெய்ம்மை, உண்மையான நன்மை, உண்மையான ஆத்திரம், உண்மையான இன்பம் ஆகியவற்றைக் காட்டி விடுகின்றனர்! குட்டின இடத்தைத் தடவுவோருக்கு, குட்டே இனிமை தருகிறது என்ற புதிரின் விளக்கம் இதுவே! திருவள்ளுவரின்