பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 விந்தன இலக்கியத் தடம் இம்மீறல்கள் அவர் படைத்த மரபு மீறிய பண்புருக்களின் மரபு மீறிய தன்மையில் இழைந்த மரபு மீறல்கள் ஆகிவிடுவன ஆகும். அந்த இடங்களில் கதை வாசகன் சலிப்படைவது உண்மை. ஆனால் அவன் சலிப்பு கதை மீதன்று - அப்பண்புருமீதேயாகும். எழுத்தாளர் விந்தன் இவ்வகைப் பண்புருக்களை சிறப்பாகக் கனகலிங்கம் போன்றவர்களைப் படைக்காதிருக்கலாம். காசத்தையும் கழுதையையும் தேர்ந தெடுத்து மனித இனத்தை அலசும் படி செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால் இவை அவை அவர் பூதநகைக்குரிய ஆழ்ந்துயர்ந்த இடங்கள் - பூதநகை பெரும் பூதநகையாக விரிவுறத் தொடங்கிய இடங்கள். ஒதெல்லோ நாடகத்தில் சேக்சுப்பியர் அயோகோ படைப்பில் தன் கலையாற்றலையே தாண்டிப் பறந்து தளர்ந்து முறிந்ததுபோல, இங்கும் எழுத்தாளர் விந்தன் தன் இயல்பான ஆற்றலின் வீச்சுக் கடந்து தளர்ந்து பின்னடைந்தார் என்று கூறலாம் ஆனால் கல்லில் உயிரையே வருவித்து, காண்பவர் அது கல் என்பதையே மறக்கடித்துவிடும் ஆற்றல் பெற்ற கலைஞன், ஏலாமையாலோ வாலாமையாலோ, கல்லை ஒரு சிறு மூலையில் கல்லாக விட்டுவிட்டிருந்தால், அது முற்றிலும் அவன் தோல்வியை மட்டும் காட்டாது - கல்லை உயிராக்கிய அவன் கலைப் படைப்புக்கும் கடவுட் படைப்பான இயல் நிலையிலுள்ள கல்லுக்கும் உள்ள நெடுந்துரத்தைக் காட்சியாளர் மறந்துவிடாமல் எடுத்துக்காட்டவும் அதுவே உதவி விடுகிறது. வாசகர் உலகுக்கு விந்தன் ஒரு கலைப்புதிர். ஆனால் கலைப்பண்புணர்வு மூலம் விளங்கிக் கொள்ளத்தக்க புதிரேயாவர். அதே சமயம் எழுத்தாளர் உலகுக்கு அவர் இன்னொரு வகையான புதிர் - "வாணிபம் செய்வார்க்கு வாணிபம் பேணிப் பிறவும் தமபோற் செயின்’ என்ற வள்ளுவர் வாசகம் விளக்கும் புதிரேயாகும். மேலையுலகின் சிறந்த கலைப்படைப்புகளை ஒதுக்கிவிட்டு, காலத்தில் மிதக்கும் பணம் ஈட்டும் வாணிகக் கலைக்