பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 27 சமையற்காரன் சொல்லைக் கேட்டுவிட்டு மனம்மாறியவனாய், அகல்யாவை இழுத்துக் கொண்டு போய் வீட்டுக்கு வெளியே விட்டுவிட்டுக் கதவைச் சாத்தித் தாளிட்டு விடுகிறான். மனமிடிந்த அகல்யை ஆழ்கடலை நோக்கி ஓடுகிறாள். இதுதான் நாவலின் சுருக்கம். இதற்கும் புராணங்களில் வரும் அகலிகை கதைக்கும் ஒப்புமை மிகக் குறைவு என்பது வெளிப்படை. ஆயினும் நாவலைப் படிக்கும்பொழுது பழைய அகலிகை அடிக்கடி நினைவில் வெட்டும்படி ஆசிரியர் எழுதியிருக்கிறார். என்றாலும் பழைய கதை எவ்விதத்திலும் வாசகனுக்குச் சுமையாக அமையவில்லை; மாறாக, பழைய கதைபற்றிய அறிவு ஒரு வகையான உணர்வு இன்பத்தைக் கூட்டுகிறது. இத்தகைய பரிசீலனை நூல்கள் பல இந்நூற்றாண்டில் மேனாட்டிலே தோன்றியுள்ளன. அவற்றோடு நாம் இங்கு ஆராயும் நாவலைத் தொடர்புபடுத்தி முடிச்சுப்போட வேண்டிய அவசியமில்லை. எனினும் அவைபற்றிய சில குறிப்புகள் இன்றியமையாதவை. பிரபல ஐரிஷ் எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸ் (James Joyce, 1882 - 1941) எழுதிய கலைஞனின் இளமைக்காலச் சித்திரம்’ (A Portrait of the Artist as a young man), g; softov (Ulysses) statusor இவ்வகையான புத்தாக்கங்களுக்குச் சிறந்த உதாரணங்கள். பண்டைய கிரேக்க மகாகவி ஹோமர் பாடிய ஒதீசி (Odyssey) காவியத்தின் பாட்டுடைத்தலைவன் யூ லிசிஸ், துரோயப் போருக்குப்பின் பல்லாண்டுகள் அலைந்து திரிந்து பல அருஞ்செயல்கள் புரிந்து இறுதியில் தன் மனைவியைச் சேருகிறான் யூலிசிஸ், மகனாய், தந்தையாய், கணவனாய், காதலனாய், போர்வீரனாய், மன்னனாய், பல கோணங்களிலிருந்து அவனை நாம் ஒதீசி காவியத்திற் காணக்கூடியதாயுள்ளது. எனவே அவனை ஒரு முழுமையான மனிதனாகச் சிலர் கொள்வர். ஜோய்ஸ், யூலிசிஸ் என்ற தமது நாவலில் லியோபோல்ட் புளும் (Leopold Bloom) என்ற பாத்திரத்தைச் சிருஷ்டித்து நவீன காலத்தில் வாழும் முழுமையான மனிதன் ஒருவனைச் சித்திரித்தார். "எனது நூல் ஒரு நவீன ஒதீசியாகும். என்றார் ஜோய்ஸ்.