பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 விந்தன் இலக்கியத் தடம் காரணமாகவே அவரைப் பிரசார நாவலாசிரியர் பிரிவிற் சேர்த்து விடுகிறார் அகிலன். ஒரு கேள்வி என்ற முன்னுரையில் விந்தன் கூறுகிறார். ‘சர்ச்சைக்குரிய எத்தனையோ விஷயங்களில் தம்முடைய அபிப்பிராயத்தை அழுத்தந் திருத்தமாக வெளியிட்டிருக்கும் பாரதியார்கூடக் கற்பைப் பற்றிக் குறிப்பிடும் போது ஆணுக்கும் ப்ெணுக்கும் அதைப் பொதுவில் வைப்போம் என்று பட்டும் படாமலும் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக يوليو/9ے/ எப்படியிருக்கும்? அப்படியிருக்க ஆண்கள் விடுவார்களா? இயற்கைதான் அதற்கு இடங் கொடுக்குமா? 'கற்பு என்பது ஆண்களால் கடைப்பிடிக்க முடியாத விஷயமாயிருக்கும்போது, பெண்கள் மட்டும் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்வதில் - இன்றும் சொல்வதில் - அர்த்தமில்லை.” ஆசிரியர் பெண்ணுரிமை விஷயத்தில் எவ்வளவு தூரம் தொடர்புற்றிருக்கிறார் என்பதை மேலேயுள்ள கூற்றுக் காட்டுகிறது. இதனாலேயே நவீன அகலிகை கதையான பாலும் பாவையும் அதே பொருளில் எழுந்த பல புது மெருகுக் கதைகளிலும் சிறந்து விளங்குகிறது. அதன் சிறப்பியல்புகள் சிலவற்றை இனிக் கவனிப்போம். பாலும் பாவையில் ஆசிரியர் வேண்டுமென்றே இராமாயணப் பாத்திரங்களையும் கதாசம்பவங்களையும் குறிப்பிடுகிறார். இதனால் இதிகாசமும் நவீன கதையும் ஒன்றையொன்று ஒட்டவும் வெட்டவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. ஆசிரியர் பழைய கருத்துக்களைக் கொள்ளும் போதும், தள்ளும் போதும் நின்று நின்று நாம் கவனிக்குமாறு இசைவுப் பொருத்தங்களை உணர்த்திச் செல்கிறார். வேறொரு நூலுக்குத் திரு.கி. சந்திரசேகரன் எழுதியுள்ள முகவுரையிற் கூறுவது இவ்விடத்திற் பொருத்தமாக் காணப்படுகிறது.