பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 41 'பாலும் பாவையும் ஈர்க்க ஏன் தவறியது என்பது மிக முக்கியமான ஒரு வினாவாகும். "கல்கி கிருஷ்ணமூர்த்தி காலத்திலும் அவருக்குப் பின் வந்த காலத்திலும், ஜனரஞ் கப் பத்திரிகைகளில் எழுதிய பல்வேறு ஜனரஞ்சக எழுத்தாளர்களுள், பத்தொடு பதினொன்றாக எண்ணப்படும் அளவுக்கு மாத்திரமே இலக்கிய மதிப்புள்ள ஓர் ஆசிரியரா விந்தன்? - எனும் வினா தவிர்க்க முடியாதபடி எழுகின்றது. விந்தன் தானே தனியனாக நின்று மனிதன் சஞ்சிகையை நடத்திய காலத்தை விட்டு நோக்கினாலும், கல்கியிலும், தினமணிக் கதிரிலும் விந்தன் பயன்படுத்தப்பட்ட முறைமையை நோக்கும் பொழுதும் அவரைச் சாதாரண சஞ்சிகை எழுத்தாளன் என்று கைகழுவி விட முடியுமா? மேலும், பாலும் பாவையும் அத்துணை மிகமிகச் சாதாரண தொடர்கதை நாவலா? விந்தனுக்கு நிலைத்த புகழைத் தேடிக் கொடுத்ததே பாலும் பாவையும் தான் என்று கூறப்படுவதுண்டு. கல்கியில் தொடர் கதையாக வெளிவந்து பின் நூலாக வெளிவந்த இந்நாவல், 1968ஜுலைக்கு முன் ஒன்பது பதிப்புக்கள் பெற்றிருந்தது. 1969க்கு முன்னரே கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. தமிழ் நாவலின் நூறாண்டு வளர்ச்சியில் முக்கியமானவர்கள் என்று தாம் கருதிய (இலக்கிய ஆர்வலர்களுக்கு அதுவரை தெரியாதிருந்த) பலரை எடுத்துக் கூறிய சிட்டி, சிவபாதசுந்தரம், விந்தனை - அதுவும் அவர்கள் இருவருமே பெரிதும் போற்றும் கல்கியால் மிக்கச் சிறப்புடன் புகழப் பெற்ற விந்தனை எவ்வாறு தவற விட்டனர் என்பதே சுவாரசியமான ஒரு வினாவாகும். இந்த வினாவுக்கான விடையின் நேரடித் தேடலுக்கு முன், சிறிது இடை நின்று, சிறுகதை இலக்கிய வரலாற்றின் அடிப்படையில் விந்தனுக்குரிய முக்கியத்துவத்தினை மீள் வலியுறுத்தல் செய்து கொள்வது முக்கியமாகும். "தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலில் விந்தன் பற்றிய மதிப்பீடு பின்வருமாறு அமைந்துள்ளது.