பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 விந்தன் இலக்கியத் தடம் தி.மு.க.வினரால் இலக்கிய நாயகர்களாக்கப்பட்டவர்களின் உண்மையான மனக் கு மைச்சல்களையும் அவர்களின் இன்னல்களையும் விந்தன், தி.மு.க.வினர் எடுத்துக் காட்டாத முறையில் திறம்படவும் மனத்தைத் தைக்கும் வகையிலும் எடுத்துக் கூறினார். பொருளுடைமையே சமூக பேதங்களுக்குக் காரணம் என்ற கோட்பாட்டினை நம்பிய விந்தன், வர்க்க பேதங்களையும் அது தோற்றுவிக்கும் வறுமை நிலையையும் கண்டித்தார். சாதாரணமாக நிகழும் ஒரு சம்பவத்தினை விவரித்து அதன் அடியுண்மையை எடுத்துக் காட்டிய யதார்த்தத்தை இலக்கிய வழக்கினுள் மீண்டும் புகுத்தினார். தொழிலாளியாக வாழ்ந்த அவரது சொந்த அனுபவம், அவரது கதைகளுக்கு உயிருட்டிற்று. (மூன்றாம் பதிப்பு - பக். 92)

  • * * g o so o 1953க்குப் பின்னர் ஏற்படும் சிறுகதை வளர்ச்சியில் முன்னோடியாக விளங்கினார்.

1953க்குப் பின்னர் ஏற்படும் சிறுகதை வளர்ச்சியென இங்கு குறிப்பிடப்படுவது, ஜெயகாந்தன், சுந்தரராமசாமி போன்றோரது ஆக்கங்களினால் தோற்றுவிக்கப்பட்ட சிறுகதை வளர்ச்சிக் கட்டமாகும். விந்தனது எழுத்துக்களை விளங்கிக் கொள்வதற்குப் பின்வரும் குறிப்பு மிகமிக முக்கியமானதாகும். எழுத்தாளர்களில் பலர் வசிப்பது சென்னையாக இருந்தாலும், அவர்களுக்குச் சொந்த ஊர் என்று வேறொரு ஊர் இருக்கும். ஆனால் விந்தனுக்கு அப்படியல்ல. அவர் பிறந்தது, வளர்ந்தது, வாழ்ந்தது எல்லாமே சென்னைதான். ராணி முத்து - ஜூலை 1969, (பாலும பாவையும் நாவல் மறு பிரசுரம்) எழுத்தாளர் அறிமுகம், பக். 11. இந்நூற்றாண்டின் ஐந்தாம், ஆறாம் தசாப்தங்களில் புனைக் கதைத் துறையில் ஏற்பட்ட முக்கிய விருத்திகளிலொன்று முற்றிலும் நகர்நிலைப்பட்ட வாழ்க்கையைச் சித்திரிக்கும் ஆக்கங்கள் தோன்றியமையே.