பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 விந்தன் இலக்கியத் தடம் பற்றிய ஆய்வுகளுக்கு இடமளிக்கவில்லை என்பது இப்பொழுது புலனாகின்றது. விந்தன் த ன் நடவடிக்கைகளினால் தனது பனநிலைமையோ, இலக்கியச் சிறப்பையோ வளர்த்துக் கொள்ளவில்லையெனலாம். இதுதான் விந்தன் வாழ்க்கையின் சோக அமிசமாகும். விந்தன் வாழ்க்கை, இலக்கியத் தொழிலாளிகட்குப் பாடங்கள் பல புகட்டுவதாக உள்ளது. ஆக்க இலக்கிய கர்த்தன், தனது திறமை பற்றிய சுய மதிப்பீடுடையவனாக இருக்கும் அதே வேளையில் தன்னுடைய இலக்கிய நோக்குப் பற்றிய தெளிவு, தன்னுடைய படைப்புக்களின் பயன்பாடு பற்றிய தெளிவு ஆகியன பற்றிய விளக்கமுடையவனாகவும் இருத்தல் வேண்டுமென்பதை விந்தன் வாழ்க்கை வரலாறு எடுத்துக்காட்டுகின்றது. தமிழில் ஆக்க இலக்கியம் வணிகமயப்பட்டிருக்கும் இன்றைய கட்டத்தில், அவ்வணிகமயப்பாடு காரணமாக வெகுசன இலக்கியத்துக்கும் (Mass literature) மக்கள் இலக்கியத்துக்குள்ள வேறுபாடுகள் வேண்டுமென்றே குழப்பியடிக்கப்பெறும் இன்றைய கட்டத்தில், இலக்கியத்தின் காத்திரமான பணிகளில் நம்பிக்கையுடையோர் தமது தேவைகளின் குவிமையத்தை (focus) சந்தேகமற நிர்ணயித்துக் கொள்ளுதல் அத்தியாவசியம். எழுத்தை வணிகமாக்கும் நிறுவனங்கள், அன்றாடக் காய்ச்சிப் பத்திரிகைக்காரர்களை அமர எழுத்தாளர்களாக்கவும், ஆற்றல் வாய்ந்த எழுத்தளர்களை வெறும் பத்திரிகைக்காரர்களாக்கவும் முயன்றுள்ளன. இதில் ஓரளவு வெற்றியும் ஈட்டியுள்ளன. விந்தன் தனது பாலும் பாவையும் நாவலின் இறுதியில் நல்லவர்கள் வாழ்வதில்லை, நானிலத்தின் தீர்ப்பு எனக் கூறியுள்ளார் என எண்ணுகிறேன். நல்லவர்கள் வாழ்வதையே நானிலத்தின் தீர்ப்பாக்கும். துணிவுடன் இலக்கிய கர்த்தாக்கள் முனைந்து எழுதாதவரையில் அது நடந்தே தீரும். 1982 శ్రీ