பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 விந்தன் இலக்கியத் தடம் ஆயிரமாயிரம் மனிதப் பிராணிகளை மக்களின் பார்வையில் கொண்டு நிறுத்தினார். அல்ல, அல்ல; மக்களின் பார்வையை அந்த அப்பாவி م உயிர்களின் பக்கமாகத் திருப்பினார்: விந்தனின் கதைகள், புதிய சமூகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் பல்வேறு வடிவங்கள். நில விவரும் சீர்கேடுகளை உடன் வைத்துக் கொண்டே, நாகரிக வாழ்வு வாழ்வதாகப் பேசி வரும் பெரிய மனிதர்களின் கூட்டத்தில் தைரியமாக எழுந்து நின்று, 'நீங்கள் வாழ்வது நாகரிகத்தின் மேலல்ல; நரகத்தின்மேல்: என்று இடித்துரைக்கும் சொற்கணைகளே விந்தனின் கதைகள். ஆனால் டாக்டர் மு.வ. அவர்கள் கூறியுள்ளது போல, 'விந்தன் படைக்கும் பாத்திரங்கள் பெரும்பாலும் அப்பாவிகளே. ஆயினும் அவர்களைப் பற்றிப் படிக்கும் மனங்கள் புரட்சி மனங்களாகவே மாறுகின்றன: இந்த அப்பாவிகளில் ஒருவர்தான் வாத்தியார் வைத்திய லிங்கம். அவரைப் படம் பிடிப்பது ஆபீசாப்பியாசம். மாதா கோவில் மணி ஒன்பது அடிப்பதுதான் தாமதம், வாத்தியார் வைத்தியலிங்கம் தலைப்பாகையை எடுத்துத் தம் தலையில் வைத்துக் கொண்டு சரி. நான் போகிறேன் என்பார் தம் மனைவியிடம். அபசகுனம் மாதிரி போகிறேன். போகிறேன் என்கிறீர்களே? போய் வருகிறேன் என்று சொல்லுங்கள் என்று திருந்துவான் அவள். "ஆமாம், நான் போய்விட்டால் உலகமே அஸ்தமித்து விடுமாக்கும்? என்பார் வாத்தியார் வெறுப்புடன், பள்ளிக்கூடத்தை நோக்கி நடையைக் கட்டுவார் வைத்தியலிங்கம். வழியெல்லாம் அவருக்குத் தெரிந்தவர்கள், அவரிடம் படித்தவர்கள் இப்படி எத்தனையோ பேர் அவரைச் சந்திப்பார்கள். ஒவ்வொருவரும், நாள்தோறும் கேட்கும் அந்தக் கேள்வியை - செளக்கியந்தானே? என்னும் கேள்வியை விடாமல் கேட்டு வைப்பார்கள் வாத்தியாரும் சளைக்காமல், சம்பிரதாயத்துக்காக செள...க்.கி.யந்...தான் என்று ஒரு பச்சைப் பொய்யைச் சொல்லிவிட்டு மேலே நடப்பார்.