பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 விந்தன் இலக்கியத் தடம் வேண்டுமென்று விரும்பினாள் மங்களம். எதிர் வீட்டுக் குழந்தைக்கும் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் கோலாகலமாக அட்சராப்பியாசம் நடக்கும்போது, தன் பிள்ளைக்கும் அதை நடத்திட வேண்டுமென்று அவள் துடிப்பதில் வியப்பில்லையே! எப்படியும் தாயல்லவா? கருவேப்பிலைபோல் ஒன்றே ஒன்று! வழக்கம் போல் தன் கணவரிடம் ஆரம்பித்தாள் மங்களம். "ஆமாம், நம் ஜயச்சந்திரனுக்கு ஐந்து வருஷங்ஸ் பூர்த்தியாகி ஆறாவது வருஷங்கூடப் பிறந்துவிட்டதே! இன்னும் எப்போதுதான் அவனுக்கு நீங்கள் அட்சராப்பியாசம் செய்து வைக்கப்போகிறீர்கள்? ‘சரிதான் போடி, அது ஒன்றுதான் குறைச்சல் நமக்கு." ‘என்ன அப்படிச் சொல்லுகிறீர்கள்? இருப்பது ஒரு குழந்தை." ‘நான் மட்டும் இரண்டு என்றா சொல்லுகிறேன்?’ “உங்கள் பரிகாசமெல்லாம் இருக்கட்டும்; கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.” ‘என்னடி, உனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது? வயிற்றுச் சோற்றுக்கே வரும்படி போதாமல், மாதம் பிறந்தால் பத்தும் இருபதுமாகக் கடன் வாங்கிக் காலத்தள்ள வேண்டியதிருக்கிறது; அட்சராப்பியாசம் என்கிறாயே? ரொம்ப அழகாய்த்தான் இருக்கிறது. ஊர்ப்பிள்ளைகளெல்லாம் உங்களைக் கொண்டு படிக்க வேண்டும்; உங்கள் பிள்ளைமட்டும் தற்குறியாகத் திரிய வேண்டுமாக்கும்? 'அதற்கென்ன, அப்படியா விட்டு விடுவேன்? பெற்றெடுத்த தோஷத்துக்காக அவனுக்கு அட் சராப்பியாசம் செய்து வைக்காவிட்டாலும் ஆபீசாப்பியாசமாவது செய்து வைக்க மாட்டேனா? "அதென்ன, ஆபீசாப்பியாசம்?

  • சரியாப் போச்சு. தயவு செய்து நீ கொஞ்சம் நேரம் "பசாமலிரேன். அதைப்பற்றி அப்புறம் பேசிக் கொள்ளலாம். இப்போது

வீட்டுச் செலவுக்கு இந்த மாதம் யாரிடம் இருபது ரூபாய் மேற்கொண்டு கடன் வாங்கலாம் என்று யோசித்துக்