பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் இலக்கியத் தடம் பத்து ஆண்டுகள் சினிமாத் துறையில் இருந்தவர் ஏழு திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதோடு ஏழு பாடல்களையும் எழுதியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை வாழப்பிறந்தவள். அன்பு, கூண்டுக்கிளி 1954இல் 'மனிதன்' என்னும் மாத இதழை நடத்தினார் 1958, இல் புத்தகப் பூங்கா என்ற பதிப்பகத்தை தொடங்கினார் அப்பதிப்பகத்தின் வெளியீடான ஜெயகாந்தனின் (ஒரு பிடி சோறு) என்னும் சிறுகதைத் தொகுப்புதான் அவரை ஆனந்த விகடனுக்கு அடையாளம் காட்டியது பத்தாண்டுகள் தினமணி கதிர் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தார் மில்டர் விக்கிரமாதித்யன் ஓ மனிதா பாட்டினில் பாரதம், எம் கே டி பாகவதர் கதை, எம் ஆர். ராதா வாழ்க்கை வரலாறு, ஆகியவற்றை எழுதியுள்ளார். முதன் முதலில் பாகவதர் வரலாற்றை எழுதியவர் விந்தன் அவர்களே விந்தன் இருதாரங்களை மணந்தவர். இரு பெண்கள், ஆறு ஆண்கள் ஆக எட்டு குழந்தைகளுக்கு தந்தையாவார் சிந்தனையாளர் விந்தன் மணி விழா காண விருந்த காலத்தில் (30 6.1975 அன்று இயற்கை எய்தினார்.