பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 61 காலத்திலேயே கதைகள் எழுதத் தொடங்கியவர். இருந்தாலும், அவர் இலக்கியத்தை இந்திர சபையின் ஊர்வசியாகக் காணவில்லை. அதைச் சமூகம் என்ற மண்ணிலேயே காண்கிறார். அதை உபதேசம் செய்யும் ஒரு சாதனமாக அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இலக்கியத்தின் மூலம் சமூக முரண்பாடுகளை, சிக்கல்களை தைரியமாக வெளிப்படுத்த அவர் தயங்கவில்லை. அவற்றை வன்மையாக விமரிசனம் செய்துவிடுகிறார். போலி இலக்கியங்களை, பொய்ம்மை மயக்கங்களைக் கண்டித்து, இலக்கியத்திற்கு நாம் ஒரு ஆரோக்கியமான இடம் அளிக்க வேண்டும் என்ற ஆவேசக் குரல் எழுப்புகிறார். அவர் கூறுகிறார். ‘போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளை, வாழ்க்கையை அலசி அலசிப் பரிசீலிக்கும் ரசாயனங்களை சமுதாயத்தின் புற்று நோய்களுக்கு மின்சார சிகிச்சை அளிக்கும் குரூர வசீகரங்களைப் படம் பிடித்துக் காட்டி, மனித உள்ளத்தில் எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது ஏங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தை, தட்டி எழுப்பும் உணர்ச்சிமிக்க உயிரோவியங்களை, அந்த அபிமானத்திற்கு விரோதமாயிருந்த, இருந்து வருகிற, மனித மிருகங்களின் மேல் வெறுப்பைக் கக்கி, உங்கள் நல்வாழ்விற்கு வழிதேட முயலும் நவயுகக் கதைகளை இன்றுபோல் நீங்கள் என்றும் வரவேற்று வாழ்த்தித் தமிழை வளப்படுத்த வேண்டும் - தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும். இதுவே என் எண்ணம்; இதுவே என் இருபது வருடகால எழுத்து.” (விந்தன் கதைகள் x) இலக்கியத்தின் மேம்பாடான இலட்சியங்களை விந்தன் இங்கு வலியுறுத்துவதைக் காண்கிறோம். அதன் அடிப்படை மனித நேயமாக இருத்தல் வேண்டும் என்பது இங்குத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. பொழுது போக்கிற்காக இலக்கியம் படைக்கிறேன் என்று கூறுபவர்களை விந்தன் மிகக் கடுமையாகச் சாடுகிறார். பொழுது போக்கு என்ற பெயரால் இன்றைய எண்ணிக்கையளவுப்